பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பங் டரிங்ட ! աւ յուաքայւա ւյchՍII பதும - அ. சினtlவாசன் 43 விடும்படிக் கட்டளையிட்டார். பிள்ளைகள் யாரும் தாங்கள் தாயைக் கொல்வதற்கு முன் வரவில்லை. ஜமதக்கினி முனிவர் மேலும் கோபம் அடைந்தார். அவருடைய கோபம் பிள்ளைகள் மீதும் ஏற்பட்டது. அப்போது தீர்த்த யாத்திரை சென்றிருந்த பரசுராமர் தனது யாத்திரையை முடித்துத் திரும்பி வந்து கொண்டிருந்தார். ஜமதக்கினி முனிவர் பரசுராமரை அழைத்து இவளைக் கொன்று விடு, எனது கட்டளையை மீறிய இவர்களையும் (சகோதரர்களையும்) கொன்று விடு என்று ஆணையிட்டார். பரசுராமரும் தனது தந்தையின் ஆணையை சிரமேற்கொண்டு எந்த பதிலும் கூறாமல் தனது கூர்மையான ஆயுதமான கோடரியை எடுத்துத் தனது தாயின் தலையைச் சீவினார். தனது சகோதரர்களையும் கொன்றார். அதைக் கண்ட ஜமதக்கினி முனிவர் மகிழ்ச்சியடைந்து தனக்கு வேண்டிய வரங்களைக் கேட்டுக் கொள்ளும் படி தனது மகன் பரசுராமரிடம் கூறினார். உடனே பரசுராமரும் பட்டென்று தன்னால் கொல்லப்பட்ட தாயும், சகோதரர்களையும் உயிர் பெற்று எழ வேண்டும். தங்களால் முடிந்தால் அதைச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஜமதக்கினி முனிவரும் தனது மகனின் வேண்டுகோளின் படி அவர் கேட்ட வரமளித்தார். பரசுராமரின் தாயும் (ரேணுகா தேவி) சகோதரர்களும் உயிர் பெற்றெழுந்தார்கள். ஜமதக்கினி முனிவர் படுகொலை கார்த்தவீரியார்ச்சுனன் கொல்லப் பட்ட போது காமதேனுவை திருப்பி ஒப்படைத்து விட்டு, அரசனுடைய பிள்ளைகள் பரசுராமனுக்குப் பயந்து ஓடியவர்கள் பின்னர் தந்தையின் நாட்டைத் தாங்கள் மூடிசூட்டிக் கொண்டு ஆட்சி நடத்தி வந்தார்கள்.