பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பரசுராமாவதாரம் ■ 44 அரச பதவிக்கு வந்த பின்னர், அவர்களுக்குக் கர்வம் வந்துவிட்டது. தாங்கள் அதிகாரமும் ஆயுத பலமும், பராக்கிரமும் பெற்றுள்ள மன்னர்கள் என்னும் மமதையும் தன்னகங்காரமும் தலை கனமும் அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது. தங்கள் தந்தையைக் கொன்ற அப்பரசுராமனைப் பழிக்குபழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுடைய மனதில் ஏற்பட்டது. அதற்கான காலத்தையும் நேரத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் பரசுராமரும் அவருடைய சகோதரர்களும் வெளியே சென்றிருந்தார்கள். அப்போது ஜமதக்கினி முனிவர் தனியாக இருந்தார். கண்களை மூடிக் தொண்டு பகவானை நினைத்துக் தியானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது கார்த்தவீரியார்ச்சுனனுடைய பிள்ளைகள் அங்கு வந்தார்கள். o நிஷ்டையில் இருந்த ஜமதக்கனி முனிவரைக் கொல்ல முயன்றனர். அதைக் கண்ட ரிஷி பத்தினி ரேணுகா தேவி ஓடி வந்து அவர்களைக் கொல்ல வேண்டாம் என்று கெஞ்சி முறையிட்டாள். ஆயினும் அவளுடைய கண்களுக்கு முன்பாகவே முனிவரின் தலையை வெட்டி, அத்தலையைத் துரக்கிக் கொண்டு தங்கள் நகரத்திற்கு ஓடி விட்டார்கள். ர்ேணுகர் தேவி அலறிச் சத்தமி ட்டாள். கதறிக் கூக்குரலிட்டாள். ரேணுகா தேவியினுடைய அலறல் சத்தம் கேட்டு, பரசுராமரும் அவருடைய சகோதரர்களும் ஒடி வந்தார்கள். நடந்த கோரமான சம்பவங்களைக் கண்டு துடித்துப் போனார்கள். தந்தையின் படுகொலையைக் கண்டு ஆத்திரமடைந்தனர். தந்தையின் உடலைக் காப்பாற்றி வையுங்கள். நான் இதோ உடனே வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டுப் பரசுராமர் தன்னுடைய பரசு (கோடாரி) யையும் இதர சக்தி ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு புயல் வேகத்தில் புறபபடடா. நகரத்தை அடைந்தார். கார்த்தவீரியார்ச்சுனனுடைய பிள்ளைகளை ஒடஒடவிரட்டி, அவர்களில் ஒருவர் கூட பாக்கியில்லாமல் கொன்று குவித்தார். அந்த கூடித்திரிய அரசர்கள் அனைவரும் மாண்ட பின்னரும்,