பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 . கூடித்திரிய நாசம் மிதிலையில் ஜனகராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகள் பெயர் ஜானகி. அவள் மகாலகூறிமியின் அவதாரம். ஜனகன் தனது மகளின் திருமணத்திற்கு ஒரு நிபந்தனை விதித்திருந்தான். அவனிடம் மிகப் பெரிய வில் ஒன்று இருந்தது. அது சிவனுடைய வில். எனவே அவ்வில் சிவ தனுசு என்று அழைக்கப்பட்டது. அந்த வில்லை எடுத்து நாணேற்றுகின்ற வல்லமை படைத்தவனுக்கே தன் மகள் ஜானகியைத் திருமணம் செய்து கொடுப்பதாக அறிவிப்பு செய்திருந்தார். பல மன்னர்களும் அதற்கு முயற்சித்து முடியாமல் சென்று விட்டனர். விசுவாமித்திரர், தனது யாகத்தை முடித்துக் கொண்ட பின்னர் இராமனையும், இலக்குவனையும் மிதிலைக்கு அழைத்துச் சென்றிருந்தார். அரசகுமாரர்களுடன் அரண்மனைக்குச் சென்றார். அந்த வில்லை எடுத்து நாணேற்றும்படி இராமனுக்குக் கட்டளை இட்டார். மிகவும் பளுவான பலம் பொருந்திய அந்த வில்லை இராமன் இலகுவாக எடுத்து வளைத்தார். நாணேற்ற முற்பட்டார். அப்போது அந்த வில் உலகமே நடுங்கும் படியானதோரு பேரொலியுடன் ஒடிந்து விழுந்தது. பின்னர் இராமனுக்கு ஜானகியை ஜனக மகாராஜன் திருமணம் முடித்து வைத்தான். திருமணம் முடிந்த பின்னர் இராமர் தனது உற்றார் உறவினருடன், அயோத்திக்குத் திரும்பினார். திரும்பும் வழியின் பரசுராமரைக் கண்டார். இருபத்தொரு தலைமுறையாக கூடித்திரியர்களைக் கொன்ற பரசுராமர், ரீராமரை அதாவது திருமணம் முடித்துத் திரும்பி வந்து கொண்டிருந்த கல்யாணராமரைத் தடுத்து நிறுத்தினார். இருவருக்கும் போர்