பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&6öursworumrunggutñ urchumulg9)]tñ — ... «faofkura-sir 47 மூண்டது. இராமர் வெற்றி பெற்று பரசுராமருடைய வில்லை முறித்து அவருடைய ஆணவத்தை அடக்கினார் என்று பாகவத புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது. உலகில் பிறந்த ஒவ்வொருக்கும் தங்களுக்குரிய கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும். உலகில் தோன்றியுள்ள ஒவ்வொரு ஜீவராசியும் கூட தனது இயல்பான செயல்பாட்டில் தங்கள் கடமைகளை நிறைவேற்றியும் தங்கள் இன விருத்தியையும் செய்து கொள்கின்றன. புல், பூண்டு, செடி, கொடி, மரம் முதலிய தாவர இனங்களும் முளைத்து வளர்ந்து, பருவம் எய்தி பூ பூத்து, காய் காய்த்து, பழம் பழுத்து, விதையாக முதிர்ந்துத் தங்கள் கடமைகளை இயல்பாக நிறைவேற்றுகின்றன. பறவைகளும் கூட்டுச் சேர்ந்துத் தங்கள் கடமைகளை தன்னுணர்விலேயே இயல்பாகவே நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. மனிதன் அதிகமான அளவில் புலனறிவும் பகுத்தறிவும் பெற்றிருக்கிறான். எனவே அவன்/அவள் தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். ஒருவர் தன்பால், தன் பெற்றோர் பால், கணவன்/மனவிை மற்றும் குழந்தைகளின் பால், சகோதர சகோதரிகளின் பால், உற்றார் உறவினர்களின் பால், விட்டின் பால், ஊரின் பால், நாட்டின் பால், உலகின் பால் உள்ள கடமைகளை தன்னுணர்வில் மட்டுமல்லாமல், சித்தத் தெளிவுடன் உணர்வு பூர்வமாகவே நிறைவேற்ற வேண்டும். இதையே நமது சாத்திரங்கள் தெளிவாக வலியுறுத்தி எடுத்துக் கூறுகின்றன. இதில் ஊனங்களும் குறைகளும் சேதங்களும் குழப்பங்களும் ஏற்படுகின்றன என்பதையும் காண்கிறோம். ஒரு மாணவன் தான் படிக்கும் போது மிகவும் கவனமாக ஆசிரியர்களிடம் பாடம் கேட்பதுடன் கவனம் எடுத்துப் படிக்க வேண்டும். பள்ளிப் படிப்புக்கு வாய்ப்பில்லாத பலரும் கூட சுய