பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கூடித்திரிய நாசம் 48 படிப்பால் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். பாடங்கள், கல்விப் பயிற்சி மட்டுமல்ல சுயமுயற்சியால் தொழில் துறையில் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். வாழ்க்கையின் பல துறைகளிலும் பலரும் தங்கள் சொந்த முயற்சிகளால் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அனைவருக்கும் முன்னுதாரணங்களாகும். ஒரு ஆசிரியன் தன்னுடைய கற்றல் கற்பித்தல் கடமைகளை சீர்படச் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் கற்றல் கற்பித்தல் கடமைகளை சரியாக நிறைவேற்றத் தவறினால், அந்த சமுதாயத்தில் சீரழிவுகளும் சிதைவுகளும் ஊனங்களும் ஏற்பட்டுவிடும். ஒரு அரசன் தனது ஆட்சிக் கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும். இன்றைய நிலைமையில் ஒரு அரசியல்வாதி தனது நாட்டின் பால், சமுதாயத்தின் பால் நிறைவேற்ற வேண்டிய கடமைகளைச் செம்மையாக நிறைவேற்ற வேண்டும். அதில் தவறினால் நாட்டில் குழப்பங்கள் ஏற்படும். ஊழல்களும் ஒழுக்கக் கேடுகளும் உள்சச்சரவுகளும் அடிதடிகளும், வெட்டு குத்துகளும், கொலைகளும், வழக்குகளும், விசாரணைகளும் ஏற்பட்டுவிடும். சமுதாயத்தில் குழப்பங்களும் அதிகமாகும். மகாகவி பாரதி பாஞ்சாலி சபதம் என்னும் ஒரு அருமையான சிறு காவியத்தை எழுதினார். அது ஒரு தலைசிறந்த காவியமாகும். அதைத் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும். அதில், "சிந்தனையில் அறமுண்டாம் - எனிற் சேர்ந்திடும் கலிசெயும் மறமு முண்டாம்” என்று குறிப்பிடுகிறார். அதற்கு ஒரு பொருள் விளக்கம் கூறகிறார். “ ஒரு சங்கத்தின், ஒரு ஜாதியின், ஒரு தேசத்தின் அறிவு மழுங்காதிருக்கும் வரை, அதற்கு நாச மேற்படாது. பாரத தேசத்திலே முற்காலத்திலே பாரத ஜாதி முழுமையின் அறிவுக்குப் பொருப்பாளியாகப் பிராமணர் என்னும் பெயருடைய ஒரு வகுப்பினர்