பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடித்திரியர் என்றால் குலமல்ல குணம், கூடித்திரியர் என்றால் நாட்டின் உடல் பலம், படை பலம், ஆட்சித் திறன், வீரம், வைராக்கியம், தற்காப்பு ஆகியவைகளாகும். இதில் நாசம் ஏற்பட்டால் நாட்டில் நாசம் விளையும், சேதம் ஏற்படும். அக்காலத்தில் ஏற்பட்ட கூடித்திரிய நாசம் பாரத சமுதாயத்தின் தலைமையில் இருந்த அறிவுத் துறையில் சிறந்த அந்தணர்களுக்கும் (பிராமணர்களுக்கும்) ஆட்சித் துறையில் சிறந்து விளங்கிய அரசர்களுக்கும் (கூடித்திரியர்களுக்கும்) இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளும் மோதல்களும் காரணமாக இருந்து ஏற்பட்டிருக்கின்றன. இதில் இருதரப்புக்கிடையிலும் உடன்பாடு கண்டு நாட்டில் ஒற்றுமை ஏற்படுவதற்கு இராமாவதாரத்தில் பரசுராமன்-கல்யாணராமன் சந்திப்பு காரணமாக இருந்திருப்பது நமக்கு ஆறுதலளிப்பதாகும். பரசுராமன்- கல்யாணராமன் உடன்பாடும், கூடித்திரியன் அரசனாகவும், பிராம்மணன் அமைச்சனாகவும் இருந்து, நாட்டில் நல்லாட்சியை நடத்தி, சமுதாயத்திற்குத் தலைமை தாங்குவதற்கும், சமுதாயத்தை மேம்படுத்துவதற்கும் வழி கோலியது என்பதைக் காண்கிறோம். இரண்டாவதாக பாரதத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய கூடித்திரிய நாசம் மகாபாரதப் போரில் ஏற்பட்டதாகும். அது கூடித்திரியர்களுக்குள்ளேயே ஏற்பட்ட உள் முரண்பாடு காரணமாக ஏற்பட்டு தருமம் வெற்றி பெருகிறது. மகாபாரதப் போரில் பாரதத்தின் மாவீரர்களான பீஷ்மர், துரோணர், கர்ணன், சல்லியன், அபிமன்னன், கடோத்கஜன் முதலியோர் கொல்லப்பட்டதும், அஸ்வத்தாமன் விதுரனைப் போன்றவர்கள் செயலிழந்து போனதும் பாரத மண்ணிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். மூன்றாவதாக மேற்கு ஆசியாவிலிருந்தும் மத்திய ஆசியாவிலிருந்தும், பாரதத்தின் மீத ஏற்பட்ட அன்னியப் படையெடுப்புகளாகும். அந்தப் படையெடுப்புகளாலும் போர்களாலும் ஏற்பட்ட சேதங்கள் நமது கலாச்சாரத்திற்கும் நமது ஆலயங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் நமது பழம்பெரும் நாகரீக வளர்ச்சிக்கும் கல்வி முறைகளுக்கும் ஏற்பட்ட சவாலாகும்.