பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. யுக சந்திப்பு இராமாயணத்தில் பல முக்கிய சந்திப்புகள் நிகழ்கின்றன. அவை காவியக் கதையில் முக்கிய சந்திப்புகள் மட்டுமல்ல, முக்கியமான கதைக் திருப்பங்களுக்கும் காரணமாகின்றன. வசிட்டன் - விஸ்வாமித்திரன் சந்திப்பு, விஸ்வாமித்திரன்-தசரதன் சந்திப்பு, விஸ்வாமித்திரன்-ஜனக மகாராஜன் சந்திப்பு, கல்யாணராமன்-பரசுராமன் சந்திப்பு, இராமன்- குகன் சந்திப்பு, வனத்தில் இராமன்-பரதன் சந்திப்பு, இராமன்-அகத்தியன் சந்திப்பு, இராமன்-சூர்ப்பணகை சந்திப்பு (புதிய நிமித்தம்) இராமன்-சுக்கிரீவன் சந்திப்பு, இராமன்-வாலி சந்திப்பு, அனுமன்-சீதை சந்திப்பு, அனுமன்-இராவணன் சந்திப்பு, இராமன்-வருணன் சந்திப்பு, இராமன்-வீடணன் சந்திப்பு போர்க்கள சந்திப்புகள், போர்க்களத்தில் வீடணன்-கும்பகருணன் சந்திப்பு முதலிய சந்திப்புகளும் கதையில் முக்கியமான சந்திப்புகளாகும். இந்த சந்திப்புகளில் நடைபெற்ற உரையாடல்களும் சிறந்த கருத்துக்கள் நிறைந்தவை. இதில் கல்யாணராமன்-பரசுராமன் சந்திப்பு யுக சந்திப்பாகும். அயோத்தி பயணம் மிதிலையில் தசரதன் விஸ்வாமித்திரன், ஜனக மகாராஜன் மற்றும் அனைவர் முன்னிலையிலும் இராமன்-ஜானகி திருமணமும், மற்றும் இராமனுடைய சகோதரர்களுடைய திருமணங்களும் முடிந்து அவர்கள் அனைவரும் அவரவர்களின் துணைவியர்களும் படை பரிவாரங்களுடன் அயோத்தி திரும்பினர். இவ்வாறு தசரதன் முதல் இராஜ பரிவாரங்கள் அனைவரும் அயோத்தியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மயில் பறவை வலப் பக்கமாகவும் காகம் முதலிய பறவைகள் இடப்பக்கமாகவும் சென்றன. இவை சகுனத் தடையாக உள்ளனவே என்று தசரதன் பயணத்தை நிறுத்தி சகுனத் துறை ஆராச்சியாளனை அழைத்துக் கேட்டான். புள்ளின் குறி தேர்வாளரான அந்த ஆராய்ச்சியாளனும்