பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. யுக சந்திப்பு 54 பரசுராமன் கோபாவேசத்துடன் தனது வல்லமை மிக்க மழுப் படையுடன் இராமனுக்கெதிரில் வந்து நின்ற போது தசரதச் சக்கரவர்த்தி அதன் காரணம் என்னவென்று புரியாமல் அந்தப் பரசுராமனைக் கண்டு பயம் கொண்டு அவன் காலடியில் விழுந்தான் வணங்கினான். பரசுராமன் தசரதனைக் கண்டு கொள்ளாமல், இராமனுக்கு முன்பாக நின்று தனது வில்லை ஊன்றிக் கொண்டு வேகமாகப் பேசினான். “இற்றோடிய சிலையின் திறம் அறிவேன், இனியான் உன் பொற்றோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன் சொற்றோடிய திரள்தோள் உறு தினவும் சிறிது உடையேன் மற்றோர் பொருள் இலை இங்கிது என்வரவு என்றனன் உரவோன்” இவ்வாறு பரசுராமன் கூறியதைக் கம்பன் குறிப்பிடுகிறார். மிதிலையில் நீ வில்லை ஒடித்த சத்தத்தைக் கேட்டேன். அந்த வில்லின் வல்லமைப் பற்றி நான் நன்கு அறிவேன். இப்போது உன்னுடைய தோள் வலியை சோதனை செய்து காண்பதற்கு நேரில் உன்னைச் சந்திப்பதற்கு விரும்பி வந்துள்ளேன். நான் போர் செய்து வெகு நாட்கள் ஆகி விட்டன. எனது தோள்கள் அதனால் தினவு கொண்டிருக்கின்றன. அதுவே என் வரவுக்குக் காரணம் என்று பரசுராமன் கூறினான். அவ்வாறு பரசுராமன் கூறியவுடன் தசரத மாமன்னன் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்தான். பரசுராமனை அடிபணிந்து தசரதன் வேண்டினான். --