பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணராமனும் பரசுராமனும்-அ-சீனிவாசன் 55 “புவனம் முழுவதும் வென்று ஒரு முனிவர்க்கு அருள் புரிவாய் சிவனும் அரி அயனும் அலர் சிறு மானிடர் பொருளோ! இவனும் எனது உயிரும் உனது அபயம் இனி என்று கெஞ்சினான் அத்துடன்” “விளிவார் விளிவது, தீவினை விழைவார் உழை அன்றோ? களியால் இவன் அயர்கின்றன உளவோ? கனல் உமிழும் ஒளிவாய் மழு உடையாய்! பொர உரியாரிடை அல்லால் எளியோர் இடை வலியார் வலி என் ஆகுவ தென்றான்” மிகுந்த அச்சத்துடன் தசரதன் முனிவரிடம் உலகம் முழுவதையும் நீ வென்று அதைக் காசிய முனிவருக்குத் தானமாகக் கொடுத்து அருள் புரிந்தவன் நீ உன்னுடைய வல்லமைக்கு முன்பு சிவன், விஷ்ணு பிரம்மா ஆகிய மும் மூர்த்திகளும் ஒரு பொருட்டல்லர். நாங்கள் எம் மாத்திரம். நானும் எனது மகனும் எங்கள் உயிரும் உனக்கு அபயம். நீ கோபப்படுவது அதற்கு உரியவர்களிடமாக இருக்க வேண்டும் அல்லவா? தீச்செயல்களைச் செய்பவர்களிடமல்லவா இருக்க வேண்டும்? இந்த இராமன் ஒரு தவறும் செய்யவில்லை. செல்வச் செருக்காலும், அதிகார மமதையாலும், நன்மைகளைச் செய்வதை மறக்கவுமில்லை. ஒளிமிக்க மழு ஆயுதத்தைக் கொண்டிருக்கும் பரசுராமரே, உமக்குத் தகுதியானவர்களிடத்திற்குச் சென்று அவர்களை எதிர்த்துப் போர் செய்வதை விட்டுவிட்டு