பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணராமனும் பரசுராமனும் முன்னுரை : பாரதபூமி பழம்பெரும் பூமி நீரதன் புதல்வர் அந்நினைவகற்றாதீர் என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு. பாரத பூமியின் கலாச்சாரப் பெருமைகளும் நாகரிகச் சிறப்புகளும் வரலாற்றுக் காலத்திற்கு முந்தியவை. அதன் தொடக்கத்தைக் காண முடியவில்லை. பாரத பூமி படைத்துள்ள சாத்திரங்களும், வேதங்களும், தத்துவ நூல்களும், நீதி நூல்களும் அறநூல்களும், அறிவியல் நுல்களும், இதிகாசங்களும் புராணங்களும் பொருள் நூல்களும் சமூகவியல் நூல்களும் அவைகளில் தமிழ் பங்களிப்பான சங்க நூல்களும், காப்பியங்களும், அறநூல்களும் திருமுறைகளும் திவ்யப்பிரபந்தங்களும், இதர பக்தி இலக்கியங்களும், மற்றும் வைத்தியம், மருந்தியல், சிற்பம், இசை, காவியம், ஒவியம் முதலியவை பற்றிய அறிவியல் தொழில் நுட்ப நூல்களும் அறிவுக் களஞ்சியங்களாகும். அவைகள் எல்லாம் இடைக்காலத்தில் மறைக்கப்பட்டும் தடுக்கப்பட்டும் இருந்தன. அவைகளை நாம் அறிந்து கொள்ள முயல வேண்டும். அவைகளில் நாம் பெருமை கொள்ள வேண்டும். அவைகளைப் பற்றிய புதிய ஆராய்ச்சிகளைச் செய்து அபிவிருத்தி காணவேண்டும். தமிழகத்தின் தலைசிறந்த சிற்ப சாஸ்திர மேதை உயர்திரு. கணபதி ஸ்தபதியார் அண்மையில் தொலைக்காட்சியில் சிற்ப சாஸ்திரம் பற்றி உரையாற்றியதை நான் கேட்க நேர்ந்தது. அதன் பின்னர், அவரிடம் நேரடியாகத் தொடர்பு கொள்ளக் கருதி தொலைபேசியில் பேசினேன். அவர், நமது நாட்டில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, சிற்ப சாஸ்திரம் ஒரு மிகப் பெரிய அளவிலான வகையில் அறிவியல் தொழில் நுட்பசாத்திரமாக வளர்ச்சி பெற்றிருந்தது என்றும், நமது மக்கள் சிற்பத்தை ஒரு