பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேத வித்தாய மேலோன் மைந்தன் நீ விரதம் பூண்டாய் ஆதலின் கொல்லல் ஆகாது அம்பிது பிழைப்பது என்றால் யாது இதற்கு இலக்கம் ஆவது? இயம்புதி விரைவின் என்றான் பரசுராமன் கூறியதைக் கேட்டு ரீராமன் புன்முறுவல் செய்து முக மலர்ச்சியுடன் நாராணன் பெயரில் உள்ள அந்த வெற்றி இதில்லைத் தருக என்று அந்த வில்லை வேகமாகக் கையில் வாங்கிச் ஆலபமாக வளைத்துக் கணை தொடுத்தான். அதைக் கண்டவுடனே பரசுராமனுக்கு அச்சமும் ஆச்சரியமும் ஏற்பட்டது. அவனுடைய கைகள் தளர்ச்சியடைந்தன. வில்லை வளைத்து அம்பைத் தொடுத்துக் கல்யாணராமன் பேசினான். உலகிலுள்ள அரசர்களையெல்லாம் மடியச் செய்தாய் என்றாலும் ஆதங்களையெல்லாம் முழுமையாகக் கற்றறிந்த மேலான வேதியன் ஆதக்கினி முனிவனுடைய மைந்தன் நீ அத்துடன் விரதம் பூண்டு தவ வேடத்தில் இருக்கிறாய். ஆதலால் உன்னைக் கொல்லக் ஆடாது. ஆயினும் நான் தொடுத்துள்ள அம்புக்கு இலக்கு வேண்டும். இந்த அம்புக்குரிய இலக்கை நீயே விரைவில் கூறுவாயாக ஆறு கல்யாணராமன் பரசுராமனிடம் கேள்வியைப் போட்டான். பரசுராமர் பணிந்தார். கல்யாணராமன் மகாவிஷ்ணுவின் துவதாமே என்பதை உணர்ந்தார். இனி உலகிற்குத் துன்பம் இல்லை. நான் தந்த இந்த வில் உன் வல்லமைக்குத் துணையாக இருக்கும். நீ தொடுத்துள்ள அம்பு பழுது பட வேண்டாம். என்னுடைய தவ வலிமை முழுவதையும் அந்த அம்பிற்கு இலக்காக்குகிறேன். இந்தக் கனை என் தவமனத்தையும் சிதைக்கட்டும் என்று தனது ஆகளைத் தளர்த்தினான். கல்யாணராமனுடைய கணையும்