பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறைவுரை கல்யாணராமன்-பரசுராமன் சந்திப்பு பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் பாரதத்தின் இதிகாச வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். பாரத நாட்டின் பராக்கிரமம் கூடித்திரியர்களின் தோள்களில் பதிவாகியிருந்தது. கூடித்திரியர்கள் என்பவர்கள், குலத்தால் அல்ல, குணத்தால் வீரர்கள். அவர்கள் அரசர்கள், ஆட்சியாளர்கள், ஆட்சி அதிகாரம் படைத்தவர்கள். அரசர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும், அறிவுத்துறையும், அனுபவஞானத் துறையும், அரசியல் ஞானத்துறையும் சில கடமைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறது. அந்தக் கடமைகள் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் மேலும் மேலும் செழுமைப்பட்டு வந்திருக்கிறது. அந்தக் கடமைகளெல்லாம் இன்றுவரையிலுமான ஆட்சியாளர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் ஆட்சிப் பொறுப்பில் உள்ள அனைவருக்கும் பொருந்தும். அவர்கள் தங்கள் கடமைகளிலிருந்து தவறும்போது கண் டி க் கப்படுகிறார்கள், தண் டி க் கப்படுகிறார்கள், திருத்தப்படுகிறார்கள், மாற்றப்படுகிறார்கள். புதிய தலைமுறை வயதால் மட்டுமல்ல செயல்முறையிலும் பொறுப்புகளுக்கு வந்து அரசியல் கடமைகள் சீராக நிறைவேற்றப்படுகின்றன. அரசியல் பிழைத்தோருக்கும் அல்லன செய்தோருக்கும் அறம் கூற்றாகும் என்பது சிலப்பதிகாரச் சொல்லாகும். நமது கதையில் வரும் கார்த்த வீரியார்ஜுனன் கடும் தவத்தாலும், விடா முயற்சிகளாலும் அளவு கடந்த அசுரபலத்தைப் பெறுகிறான். ஆயிரம் கரங்களின் வல்லமையைப் பெறுகிறான். அதனால் பெரும் அகம்பாவமும் அடைகிறான். தனக்குயாரும் நிகரில்லை என்று கருதுகிறான்.