பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 அவன் தனது படைகளை ஏவி ஜமதக்கினி முனிவரின் ஆசிமத்தில் இருந்த காமதேனு என்னும் தெய்வீகப் பசுவை, அவருடைய வல்லமை மிக்க பிள்ளைகள் இல்லாதபோது வன்முறையாகக் கவர்ந்து, தனது நாட்டிற்குக் கொண்டு சென்று விடுகிறான். முனிவர், தனது பிள்ளைகள் வந்தவுடன் அவர்களிடம் நடந்த நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறுகிறார். ஜமதக்கினி முனிவரின் பிள்ளைகளில் ஒருவன் பரசுராமன். அவன் ஒரு மகா பராக்கிரமசாலி. அவனுடைய தெய்வீக ஆயுதம் பரசு (கோடலி). தனது தந்தை கூறிய செய்தியைக் கேட்டு ஆவேசம் கொண்ட பரசுராமன் தனது தெய்வீக ஆயுதத்துடன் கார்த்த வீரியார்ஜுனனுடைய நாட்டிற்குச் சென்று அரசனையும் அவனுடைய படைகளையும் எதிர்த்துப் போரிட்டு வல்லமைமிக்க கார்த்த வீரியார்ஜுனனையும் அவனுடைய படைகள் பலரையும் கொன்றுவிட்டு தெய்வீகப் பசுவை மீட்டிக் கொண்டு வந்து தனது தந்தையிடம் ஒப்படைத்துவிடுகிறான். ஜமதக்கினி முனிவர் தனது பசு திரும்பி வந்தது கண்டு மகிழ்ச்சியடைந்த போதிலும், கார்த்த வீரியார்ஜுனன் கொலை செய்யப்பட்டது கேட்டு மனம் வருந்தினார். அவர் தனது மகன் பரசுராமனிடம், அரசனைக் கொன்றது நியாயமில்லை. நீ பிராமணன். நீ ஆயுதம் எடுக்கலாம், ஆனாலும் உனது போர் அறவழியில் இருக்க வேண்டும். அரசன் கூடித்திரியன். நாட்டில் கூடித்திரிய நாசம் ஏற்பட்டுவிடக் கூடாது. அரசனைப் போரில் தோற்கடித்து பசுவை மீட்டியிருக்க வேண்டும். அறிவாற்றல் மூலம் ஆட்சி அதிகாரத்தை முறியடித்திருக்க வேண்டுமே தவிர அரசனைக் கொன்றல்ல. அரசனைக் கொன்றதால் உன்மீது பிரமஹத்தி தோஷத்தைப் போன்றதொரு தோஷம் ஏற்பட்டு விட்டது. புண்ணிய கூேடித்திரங்களுக்குச் சென்று புண்ணிய துறைகள் ஆடி உன் பாவத்தைப் போக்கிவிட்டு வா என்று கூறித் தன் மகன் பரசுராமனை பாரத நாட்டைச் சுற்றி வர அனுப்பிவைக்கிறார்.