பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணராமனும் பரசுராமனும் - அ. சீனிவாசன் 65 பரசுராமன் ஆவேசத்துடன் வந்ததைக் கண்டு தசரதன் பயமும் பீதியும் அடைந்து பரசுராமனிடம் அடிபணிந்து, இராமன் எந்தத் தவறும் செய்யவில்லை. அவன் தனது அரசக் கடமைகளை மறந்தவனுமல்ல. கோபம் கொள்பவர்கள் மற்றும் தீச்செயல்களை விரும்பிச் செய்பவர்களிடம் தானே தாங்கள் கோபத்தைக் காட்ட வேண்டும்? செல்வச் செருக்காலும் அதிகார மமதையாலும் இராமன் தனது அரச கடமைகளையும் நன்மைகள் செய்வதையும் மறக்கவில்லை. மழுவாயுதம் கொண்டுள்ள மகா முனிவரே, நீர் போர் செய்வதற்கு வலுவுள்ளவர்களிடம் தானே செல்ல வேண்டும். எங்களைப் போன்ற எளியோர்களிடம் வரலாமா?’ என்று கெஞ்சுகிறான். "விளிவார் விளிவது தீவினை விழைவார் உழை அன்றோ? களியால் இவன் அயர்கின்றன உளவோ? கனல் உமிழும் ஒளிவாய் மழுவுடையாய்! பொர உரியாரிடை யல்லால் எளியோர் இடை வலியார் வலி என் ஆகுவ தென்றான்”. என்பது கம்பனுடைய பாடல். தசரதனுடைய கெஞ்சுதலை பரசுராமன் கொஞ்சம் கூடச் சட்டை செய்யவில்லை. இராமனுக்கு நேராக அவனெதிரில் நின்று உலகெலாம் முனிவற்கு ஈந்தேன், உருபகை ஒடுக்கிப் போந்தேன். அளவற்ற தவங்களைச் செய்து கொண்டு மலையடிவாரத்தில் இருந்தேன். நீ மிதிலையில் வில் ஒடித்த சப்தம் கேட்டு ஓடோடி வந்தேன். என் கையில் இருப்பது விஷ்ணு தனுசு. நீ ஒடித்த வில் முன்பே ஒடிபட்ட வில். இதோ உள்ள என் கை வில்லும் அதுவும் ஒன்றாகப் பிறந்தவை. அதைச் சிவபெருமானும், இதைத் திருமாலும்