பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. நிறைவுரை 66 ஏந்திப் போர் புரிந்தனர். சிவபெருமானுடைய வில் முறிந்தது. அதனை அவர் இந்திரனிடம் கொடுத்தார். அதுவே மிதிலையில் இருந்த வில். திருமால் தன் வில்லை இருசிக முனிவரிடம் தந்தார். அவர் அதை என் தந்தையிடம் அளித்தார். எந்தை அதை என்னிடம் கொடுத்தார். என்னுடன் போர் செய்ய உனக்கு வல்லமை இருந்தால் இந்த வில்லை வாங்கு பார்க்கலாம். என்று பரசுராமன் விஷ்ணு தனுசை நீட்டினான். கல்யாணராமன் புன்சிரிப்புடன் பரசுராமன் கையில் இருந்த விஷ்ணு தனுசைத் தனது கையில் வாங்கி சுலபமாக அதை வளைத்துக் கணையும் தொடுத்துவிட்டான். பரசுராமன் பணிந்தான். 'இராமா! நீயே சக்கரப் படைகொண்ட திருமாலாகும். நீ மனிதனாக அவதரித்து அரச கடமைகளை, அரசியல் கடமைகளைச் செய்ய தொடங்கிவிட்டாய். இனி இந்த உலகிற்கு இடுக்கண்கள் துன்பதுயரங்கள்) இருக்காது. "நீ தொடுத்த அம்புக்கு எந்தப் பழுதும் இல்லாமல், என் தவபலம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய் உன்னிடம் சேர்த்துவிடும். எனது இந்த வில்லும் எனது தவபலமும் உனதாகட்டும். எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக என்று கூறி இராமனிடம் விடை பெற்றுக் கொண்டு, பரசுராமன் தான் முன் பிருந்த மலையடிவாரத்திற்குத் தவம் செய்யச் சென்றுவிட்டான். என் பதைக்கதையில் பார்த்தோம். கல்யாண ராமன் பரசுராமன் சந்திப்பு ஒரு யுக சந்திப்பாகும். இந்த நிகழ்ச்சிமூலம் பிராமணர்களுக்கும் கூடித்திரியர்களுக்கும் இடையில் இருந்த அதாவது அறிவாளிகளுக்கும், அரசர்களுக்கும் இடையிலான பகையும் கசப்பும் நீங்கியது. கூடித்திரியன் அரசனாகவும், பிராமணன் அமைச்சனாகவும் இருந்து தங்கள் கடமைகளை சீராக நிறைவேற்றி நல்லாட்சி நடத்தி மக்கள் அனைவரையும் ஒற்றுமைப் படுத்தி வழி நடத்திச் செல்கிறார்கள்.