பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6


6 சாந்திக் கூத்தே போலும். இவை குறித்து இராஜ நாராயணச் சம்புவராயரது 5 ஆவது ஆட்சியாண்டுக் குரிய திருவொற்றியூர்க் கல்லெழுத்துச் சில செய்திகளைக் கூறுகின்றது" எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள் சுந்தர பாண்டிய தேவர் காலத்தில், கொத்தப்பராயர் ஆன வாணராயர் அதிகாரியாய் இருந்த நாளில், திருவொற்றி யூர்த் திருக்கோயிலில் பதியிலார் பலர் நியமிக்கப் பெற்றனர். அவர்களுள் பலர் இறந்து போனர்கள். ஆகவே பதியிலார்க்கு உதவியாகச் சில இஷபத் தங்ளியி லாரை நியமித்தனர். தேவரடியார் இதுகாறும் செய்து வந்த திருவலகிடல், திருமெழுக்கிடுதல், தளிகை விளக் குதல், அமுதுபடிக்கு அரிசி கழுவுதல் முதலிய வேலை களேச் செய்ய வேண்டுவதில்லை ; பதியிலார் சந்திக் குனிப்பம் இடும்பொழுது தேவரடியார் நாச்சியாருக்குச் சந்திக் குனிப்பமிட வேண்டும் ; பகல் ஒலக்கத்தில் வெண் சாமரமும் கவரியும் பணிமாறுமிடத்தும் பதியிலார் முன்பும் தேவரடியார் பின்பு மாகப் பணிமாற வேண்டும்; தேவரடியார் திருநீற்றுக் காப்பும் புஷ்பத்தளிகையும் எல்லா இடங்களிலும் எடுக்க வேண்டும் ; அப்பொழுது இஷபத் தளியிலார் அக மார்க்கமும் வரிக் கோலமும் ஆட வேண்டும் ; பதியிலார் சொக்கம் ஆடும் பொழுதும் சந்திக் குனிப்பம் இடும் பொழுதும் இஷபத் 9. சகரயாண்டு 1265-6 ; A. R. E. 1913 ; Page 1 27, Paragraph 67. 10. 212 of 1912 ; No. 525 of South Indian Temple Inscriptions Vol. I, Page 51 1-18.