பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


96 மூன்ரும் இராசராசசோழன் 1216 முதல் 1246 வரை அரசாண்ட சோழவரசனவன். இவனது 22 ஆம் ஆட்சியாண்டுக்கல்வெட்டொன்றும் நிலவிலப் பிரமான இசைவுத் தீட்டுஆகும். நிலத்தை விற்றவர்களுள் ஒருவன் ஆரம்பூண்டான் என்ற பெயரை யுடையவன். இவன் கூத்தன் குன்றனை கிழாற்றுார் அரையனுக்குத் தம்பி யாவன் ; இவனுடைய தம்பியின் பெயர் தாழி என்பது; ஆரம்பூண்டானும் தாழியும் சயிஞை ஆயினமைக்கு, இராசேந்திர சோழ மங்கலத்துக் காவற்காணியுடைய பெருமாள் அழகனுன மணவாள முத்தரையன், இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளான். முடிப்புரை எனவே சமய குரவர்களால் குறிக்கப் பெற்ற தாகிய இறைவன் ஆரம் பூண்ட வரலாறு சமயத் தொண்டு புரிந்தவர்களும் பொது மக்களும் தம் பெய ராகப் பூண்டு அவ்வற்புதச் செயலே நினைவுகூர்ந்து போற்றினர்கள் என்று அறிகிருேம். இதனுைம் சோழர் காலத்துத் தமிழ்ப் பெருமக்கள் சிவசரிதங்களுள் ஈடு பாடு உடையராயிருந்தமை நன்கு விளங்கும். இனி ஷெ கல்லெழுத்துக்களில் தேனுருங் கொன்றையன், என் ேைனக் கன்று பட்டன், ஆதிச்செல்வன் பண்டாரம், நல்ல நாம முடையான், சிலந்தியைச் சோழனுக்கினுன் திருத்தோப்பு முதலிய பெயர்கள் காணப் பெறுகின்றமை அறிந்து இன்புறற பாலனவாம். o 4. S. I. I. Vol. VIII No. 340; A. R. No. 65 of 1903. 5. சயிஞை - கையெழுத்திடத் தெரியாதவர் என்று. பொருள்படும் போலும்.