பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவப்பெருந் தேவு செய்தார். அன்ருெருநாள் ஏழாம் நூற்ருண்டின் இடைப்பகுதி == திருச்சாய்க் காடு திருச்சாய்க்காடினிதுறையுஞ் செல்வர் திருக் கோயிலில் - பூக நீறுபோல் உள்ளும் புனிதர்கள் ஈர அன்பினர் யாதும் குறைவிலாச் கைத்திருத் தொண்டு செய் கடப்பாட்டினர் - பாரம் ஈசன் பணியலதொன்றிலார் பலர் குழுமினர்; நிரந்த நீற்ருெளியால் நிறை தூய்மை யால், அஞ்செழுத்து ஓசை பொலிதலால் பாற்கடல் போன்ற காட்சி ! ஞானத் தவமுனிவர் திருநாவுக்கரசர் எழுந்தருளுகிருர் - நாவார நம்பனேயே பாடப் பெற்ருேம் என்ற பெருமித நடை கந்தைமிகையாம் கருத்து கையுழ வாரப் படை - வடிவிற்பொலி திருநீற்றுத் தோற்றம் - ஹர ஹர முழக்கம் - யாவரும் பூமழை பொழிகின்றனர்-நாவரசர் பாமழை பொழிகிறர் ! ஒருபாடல் - கண்ணப்பருடைய தொண்டு: ' குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரம் துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித் துயவாய்க் கலசம் ஆட்ட உவப்பெருங் குருதி சோர ஒருகணை இடந்தங் கப்பத் தவப்பெருங் தேவு செய்தார் சாய்க்காடு மேவி னரே...'

பின்னுெருநாள் பதின்மூன்ரும் நூற்றண்டின் இடைப்பகுதி - திருச் சாய்க்காடு - திருக்காளத்தி ஆண்டார் என்ற ஒரு மெய்

  • திருவாமூர் மகாகும்பாபிஷேக மலரில் வெளிவந்தது.

7