பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99


99 சகர பாண்டு 12:42 திருக்காளத்தி-திருமணிக் கெங்கையுடைய நாயனர் கோயில் - திருமணிக் கெங்கைச் சீயன் என்ற அதிகாரி அவ்வூரிலுள்ள சில நிலங்களின் உரிமைகளை மாற்றி யமைக்கிருர் - இந்தச் சாசனத்தில் (A. R. No. 198 of 1903) பலரும் கையொப்ப மிடுகிருர்கள். அவர்களுள் ஒருவர், திருக்காளத்தி ஆண்டார் தவப்பெருந் தேவு செய்தார். இதே நாளில் இன்னுெரு தரும சாசனமும் எழுதப்பெறுகின்றது. திருக்காளத்தி - திருமணிக் கெங்கை யுடைய நயனர் கோயில் வடக்குத் திருவீதி-தெற்கடையப் பாதியில் தவப்பெருங் தேவு செய்தார்க்கு உரிய நிலம் - பணம் நாற்பத் தொன்பதுக்கு விலைக்குக் கொண்டது - இன்னும் சில நிலங்களையும் திருநாமத்துக் காணியாகத் திருமணிக் கெங்கைச் சீயனர் விலைக்குக் கொண்டார் (A. R. No. 199 of 1903). முடிப்புரை எனவே, திருநாவுக்கரசர் திருச்சாய்க்காட்டுத் திரு நேரிசையில் திருக்கண்ணப்பர் வரலாற்றைப் பாட, அதிற்கண்ட தவப்பெருங் தேவு செய்தார் என்ற சொற்ருெடரை ஒரு அன்பர் தன் மகற்கு இட்டார் என்றும், இப்பெயர் 14ஆம் நூற்ருண்டில் திருக்காளத்தித் திருக்கோயில் சாசனங்களில் காணப்படுகின்றன என்றும், திருமுறைச் சொற்ருெடர்களே மக்கட்கு இடும் பழக்கம் முன்னுளில் மிக்கிருந்தமைக்கு இதுவும் ஒரு சான்ருகும் என்றும், சைவராவார் இந்த முறையை மீண்டும் வழக்காருக் கொள்ளுதல் தகும் என்றும் அறியலாம். + =