பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101


101 திருவெம்பாவை உள்ளக் கிடக்கை பழைய திருப்பெருந்துறைப் புராணத்தில் திரு வாசகச் சிறப்புரைத்த அத்யாயத்தில் திருவெம்பாவையின் கருத்துப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: ' மலவிருளுற்று உறங்காமல் மன்னுபரி பாகரருட் செலமுழுக வருகவெனச் செப்பல் திரு வெம்பாவை." திருவெம்பாவைப் பதிப்புக்களில் 'ச க் தி ைய வியந்தது' என்ற குறிப்புக் கொடுக்கப்பட்டுள்ளது ; அக்சக்திகள் தாமும் ஒன்பது என்ப. சென்னை அரசிய லார் வெளியிட்ட திருவாசக வியாக்கியானம் ' என்ற உரை சீகாழித் தாண்டவராயர் என்பவராலே எழுதப் பெற்றது. அதில் திருவெம்பாவைக் கருத்தாக அகத்தியச் சூத்திரம்’ என்ற பெயரில் பின்வருமாறு உள்ளது: திருவெம் பாவையார் தசசத் திகளேயும் மருவி வியந்து வாய்மொழி பகர்ந்தது ' என்பது அது. பிறரெல்லாம் நவசக்திகளையே" கூறத் திருவாசக வியாக்கியானம் மட்டும் தச சக்திகளைக் கூறு கிறது. 1. நவசக்தி-மனேன்மணி, சர்வபூத தமனி, பலப் பிரமதனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை. 2. தசசக்தி-பராசக்தி, ஞானசக்தி, இச்சா, கிரியா, ஆதி, திருவருளின்பச் சக்தி, தெருள், அருள், இன்பான சிவசக்தி, இன் பாதீத சிவசக்தி.