பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102


102 நுதலிய பொருள் திருவெம்பாவை முதல் எட்டுப் பாடல்களில் பெண்கள் விடியற்காலேயில் எழுந்து ஒவ்வொரு வீடாகச் சென்று, உறங்கும் தம்மோடொத்த பெண்களே எழுப்பிச் சிவபெருமானுடைய பெருமையைப் பாடிக் கொண்டே வருவதாகக் காணப்படுகிறது. இதில் இறை வனைப் பாடுதலும், அவனுடைய பொற்பாதத்தை ஏத்து தலும், அவன் பாதத்திறம் பாடி ஆடுதலும் பல இடங் களில் கூறப்பட்டுள்ளன. திருப்பாவையில் கூறப் பட்டுள்ளது போலப் பாவை நோன்பு கூறப்பட்டதாகத் தெரியவில்லை. மார்கழித் திங்களில் திருவாதிரைக்கு முன் பத்து நாட்கள் சிவபெருமானைப் பாடிப் பூம்புனல் பாய்ந்து ஆடுதலே திருவெம்பாவையில் வற்புறுத்திக் கூறப்பட்டுள்ளது. திருவெம்பாவையில் காணப்படும் உயிர்நாடி ஆகிய மற்ருெரு செய்தி கவுனிக்கத் தக்கது. 1. உன் இனப் பிரானுகப் பெற்ற உன் சீரடியோம் உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் ' (செ. 9); எங்கள் பெருமான் உனக்கொன்(று) உரைப்போம் கேள் ! எங்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க ! எங்கை உனக்கல்லா(து) எப்பணியும் செய்யற்க ! கங்குல் பகல் எங்கண் மற்றென்றும் காணற்க !' (செ. 19) என்ற பாடற் பகுதிகள் கூர்ந்து கவனிக்கற் பாலனவாம். இப்பகுதிகளில், சைவசமயப் பற்று உடையவராக வாழ்தல் வேண்டும் என்பது அழுத்தமாகச் சொல்லப் "