பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7


7 தளியிலார் பாடுதல் வேண்டும் ; பதியிலார் பாடும் பொழுது இஷபத் தளியிலார் பாடல் வேண்டும் , திரு வெண்சாமரமும் திருவந்திக்காப்பும் இஷபத் தளியிலார் எடுக்க வேண்டியதில்லை ; பதியிலார் ஆண்டொன்றுக்கு 30 கலம் நெல் பெறுவாராகவும்; தேவரடியார் நாளொன் றுக்கு நாழிச்சோறு பெறுவாராகவும்-இவ்வாறு ஏற் பாடுகள் செய்யப்பெற்றன. வரி என்பது விலக்குறுப்புப் பதின்ைகனுள் ஒன் றென்றும், அது எட்டு வகைப்படும் என்றும், வரியாவது அவரவர் பிறந்த நிலத் தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழிற்றன்மையும் தோன்ற நடித்தல் என்றும் கூறுவர் அடியார்க்கு நல்லார். இக் கல்லெழுத்தினின்று சாந்திக் கூத்தின் வகை களேத் தளியிலாரும் இஷபத் தளியிலாரும் நிகழ்த்தி வந்தனர் என்றும், இவர்களுள் இஷபத் தளியிலார் சிறந் தவர் என்றும் அறிகிருேம். திருவிடை மருதூரில் ஆரியக் கூத்து : இரண்டாம் ஆதித்தன் காலத்தில் திருவிடை மரு துாரில் கித்தி மறைக்காடனுன திருவெள்ளறைச் சாக்கை என்பவன் இருந்தான். அவன் தைப்பூசத் திருநாளில் 11. விலக்குறுப்பு - தலைவன் செலுத்துகின்ற கதையை விலக்கியும், அக் கதையை நடாத்தியும், முன்பு செய்த கதைக்கே உறுப்பாகுவது ; சிலப் பக். 89. o

  • புராண இதிகாசக் கதைகள் தழுவி வரும் கூத்து, ஆரியக் கூத்து-மு. ரா. ஆராய்ச்சித் தொகுதி, பக். 458, அடிக் குறிப்பு. --