பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106


106 ஆட்சியாண்டு (கி. பி. 1175)க் குரிய ஒரு கல்வெட்டு @(5$$pg5 (421 of 1912; ARE 1913 Para 37.) SPG55uř கோவிலுக்கு முப்பதுகாசு முதற்பொருள் கொடுத்தார் ; அதற்கு ஆண்டொன்றுக்கு 114 காசு வட்டியாகும். அவ்வட்டியைக் கொண்டு வழுவூரில் எழுந்தருளுவிக்கப் பெற்ற திருவாதவூராளிங்ாயனர் திருவுருவத்தின் முன்பு மார்கழித் திருவாதிரை நாளில் திருவெம்பாவை ஒத வேண்டு மென்றும், பங்குனித் திருநாட் செலவு செய்ய வேண்டுமென்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனுல் மார்கழித் திருநாளில் மாணிக்கவாசகர் திருமுன்னிலையில் திருவெம்பாவை ஓதுதலாகிய மரபு 12 ஆம் நூற்றண் டிலேயே வழக்கில் இருந்தது என்பது தெளிவாகத் தெரியவருகிறது. இதல்ை திருவெம்பாவை ஓதும் வழக்கம் சோழநாட்டில் இருந்தமையும் தெளிவு. நாங்குனேரியில் நாங்குனேரி என்பது திருநெல்வேலிக்குத் தெற்கே 20 மைலில் உள்ள ஒரு வைணவத்தலம். வானமாமலைப் பெரும ாள், திரு வேங்கட முடையான் ஆகிய இரு வைணவக் கோவில்களும், திருநாகேசுவரம் என்னும் ஒரு சிவன் கோவிலும் அவ்வூரில் உள்ளன. அவ்வூர், திருவாய் மொழியில் சிரீவர மங்கல நகர்’ என்று குறிக்கப் பட்டுள்ளது; ரீவல்லப பாண்டியன் காலத்தில் "நாங்குனேரியான அபயாஸ்ரய சதுர்வேதி மங்கலம்’ என்றும் (260 of 1927-28), பின்னர் சீவர மங்கைச் சதுர்வேதி மங்கலம் என்றும் (259 of 1927 - 28) கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ளது. அவ்வூரில் திருநாகேசுவரர் கோவில் இறையகத்தின் வடக்குச்