பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107


107 சுவரில் சோணுடு வழங்கியருளிய சுந்தரபாண்டிய னுடைய 14 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (265 of 1927-28) திருவெம்பாவை விண்ணப்பித்தலைக் குறித்து அறிவிக்கிறது. இக்கல்வெட்டில் இவ்வூர் அபயாஸ்ரயச் சதுர்வேதி மங்கலம்’ என்றும், பாச்சாற்றுப் போக்கி லுள்ள ஒரு பிரமதேயம் என்றும் குறிக்கப் பெற்றுள்ளது. மேற்குறித்த மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் 'மருவாய்க் குறிச்சியான நரலோக வீரநல்லூரில் ஒரு விற்படை இருந்தது. அதற்கு இரண சிங்க வீரந்தெரிந்த வில்லிகள் என்றுபெயர். அப்படையில் ஒரு சிறந்த வில்வீரன் இருந்தான். அவனுக்குச் சோழன் குன்றன் என்று பெயர். அவனுடைய சிறப்புப்பெயர் அவனி நாராயணப் பல்லவரையன் என்பது. திருநாகேசுவரர் கோவிலுக்கு உள்ள தேவதான நிலங்கள் தரிசாகக் கிடந்தன. ஆகையால் இறைவனுக்குரிய நிவேதனம் குறைந்தது. அக்குறையை நிறைவிக்கவும், மார்கழித் திருவாதிரையில் சிறப்புப் பூசனை வழிபாடுகளுக்காகவும், திருவெம்பாவை விண்ணப்பித்தற்காகவும் சோழன் குன்றன் இரண்டு ஆனே அச்சு நிபந்தமாக அளித் தான். இதனுல் பாண்டி நாட்டில் திருவெம்பாவை ஒதப்பட்டமை தெளிவு. முடிப்புரை மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவுை தமிழ்நாடு முழுவதும் பல நூற்ருண்டுகளாக மார்கழித் திருவாதிரை நாட்களில் ஒதிவந்த செய்திகள் மேலே கண்ட கல்வெட் டுக் குறிப்புக்களால் அறியப்பட்டனவாம். கடல்கடந்த கீழை நாடுகளாகிய கடாரம், சாவகம், சயாம் முதலிய நாடுகளிலும் திருவெம்பாவை பரவியது மகிழத்தக்கதாம்.