பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10


10 கூத்து, கூத்தச் சாக்கையன் என்பவனுல் நடிக்கம் பெற்றது. அவன் நடித்துக் காட்டிய கூத்து, கொட்டிச் சேதம் ' எனப் பெற்றது. இதனை, ' உமையவள் ஒரு திற கை ஓங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து ' என வரும் சிலப்பதிகார அடிகளால் அறியலாம். நட்டுவக் காணி நித்த விநோத வளநாட்டுக் கிழார்க் கூற்றத்து ஆயிரத் தளிப்பால் ரீ பராந்தக தேவீச்சரத்து நட்டுவக் காணியும், மெய்ம்மட்டுக் காணியும் போர்வியக் காணி யும் உடைய நித்தவிடங்கன் மல்லேயன் என்று ஒருவன் இருந்தான். அவன் இறந்துவிட்டதும் முதல் இராசேந் திரனது 26 ஆம் ஆட்சி ஆண்டில் அந்த நித்தவிடங்கன் மல்லயனுடைய மைத்துனன் நங்காந்தர்வன் அரையன் ராஜராஜனுன முடிகொண்ட சோழ வாச்சிய மாராயன் நியமிக்கப்பெற்று, அவனும் அவன் வர்க்கத்தாரும் நட்டுவக்காணியை அநுபவிக்குமாறு உத்தரவு பிறப் பிக்கப் பெற்று, 30 ஆவது ஆட்சியாண்டில் கல்லில் வெட்டப்பட்டது. இச் செய்திகளைக் கண்டியூர்ச் சாசனத்திலிருந்து அறிகிருேம். 17. திரிபுரம் தீ மடுத்தெரியக் கண்டு வென்றிக் களிப்பால் உமையாளுடன் ஆடிய கூத்து இது கொட்டி எனவும், கொடுங்கொட்டி எனவும் பெறும்; இது பதினுெரு புற நாடகங்களில் ஒன்று. 1 S. S. I. I. Vol. V. No. 579. "