பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11


11 இனி இரண்டாம் இராசேந்திரனின் 5 ஆம் ஆண்டுக்குரிய மேலப்பழுவூர்ச் சாசனத்தினின்று ஓர் ஆடலாசிரியனுக்கு நட்டுவக் காணி அளித்த செய்தி தெரிய வருகின்றது. தேவன் உதய நாயகன் என்பவரிடமிருந்து அவனுக்குரிய நட்டுவக் காணியைக் குலோத்துங்க சோழ நிருத்தப் பேரரையன் என்பான் விலைக்கு வாங்கித் தன் மகளுக்கு ரீதனமாகக் கொடுத்தான்: அவளுடைய கணவன் மற்றப் பதியிலார் போலக் கோயிலில் தொண்டு செய்யவும், அதற்குரிய உரிமை களை அநுபவிக்கவும் உரிமை பெற்றிருந்தான். இச் செய்திகளே மூன்ரும் குலோத்துங்க சோழனது திருச் சோற்றுத் துறைக் கல்லெழுத்து அறிவிக்கின்றது. இனி இச் சோழனுடைய 12 ஆம் ஆட்சியாண்டுக் குரிய திருவிடை மருதூர்க் கல்லெழுத்திலும் (S.1.1. Yol. V. No. 76; 142 of 1895) ஷை குலோத்துங்க சோழ நிருத்தப் பேரரையன் பேசப் பெறுகிருன். இவன் திருவிடை மருதூர்க் கோயிலில் உடுக்கை வாசிப்பார் பங்கு காணியுடைய எண்ணரியான் என்கிறவன் பக்கல் நட்டுவரில் இக் குலோத்துங்க சோழ நிருத்தப் பேரரையன் விலைகொண்டு அநுபவித்து வருகிற பங்கு இரண்டும், இவன் விலைகொண்ட பிரமாணப் படியே இவனும் இவன் வர்க்கத்தாரும் காணியாய் அநுபவிக்கு. மாறு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. 19. 361 of 1924. 2 O. 206 of 1931; S. I. T. I. No. 1008.