பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


21 1248) க்குரிய கல்லெழுத்து ஒன்று திருத்தொண்டத் தொகையான் திருமடம் என்று ஒரு மடத்தைக் குறித்துச் சில செய்திகளைக் கூறுகின்றது. சிதம்பரத்தவராகிய சுப்பிரமணிய சிவம் என்பார் கண்டா பரணர்’ என்ற ஒருவருடைய பெயரர். இவர் சில நிலங்களை விலைக்கு வாங்கித் திருத்தொண்டத் தொகையான் திருமடத்துக்கு அளித்தார். இத்திருமடம் கோவந்தபுத்துாரில் திருவிசய மங்கை என்ற திருக்கோயிலில் திருமடை விளாகத்தில் இருந்தது. இங்ங்னம் அளிக்கப்பெற்ற நிலவருமானம் இத்திருமடத்துக்கு வரும் யாத்திரிகர்களுக்கு உப்பும் ஆமணக்கெண்ணெயும் கொடுக்கவும், ஸ்தானத்தார் நோய்வாய்ப்படின் அவர்களுக்கு வைத்திய உதவி செய்யவும் பயன்படுத்தப் பெற்றது." குன்றத்துாரில் மூன்ரும் இராசராச சோழன் காலத்தில் குன்றத் துார் நாடு முழுதும் வைத்தியம் செய்தவர் மங்களாதி ராசன் சீராளன் எனப் பெற்ருர். இவரும் ஒரு சவர்ணன் ; இவர் காஞ்சய கோத்திரத்தவர்; இவர் கடக மெடுத்த கூத்தப்பிரான், சிவகீர்த்தி, சைவ சிகாமணி என்ற சிறப்புப் பெயர்களைக் கொண்டவர். இவ்வடை மொழிகளால் இவர் சமய அறிவு படைத்தவர் என்றும் அறியலாம். இவருக்கு வைத்தியக்காணி அளிக்கப் பெற்றது. - 13. 192 of 1929. 14. பிற செய்திகளே இந்நூலாசிரியர் வெளியிட்ட * இலக்கியக்கேணி"யில் காண்க. 15. 784 of 1929-30; மூன்ரும் ராசராசனின் 7ஆம் ஆட்சி ஆண்டுக் கல்லெழுத்து.