பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22


22 சுகடுரில் மைசூரைச் சேர்ந்த சுகடுரில் விக்கிரம சோழனது 2ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்துளது. இதில் உதய மார்த்தாண்ட பிரமாராயன் என்று ஒருவர் பேசப் பெறுகிருர். இவர் சகரயாண்டு 1042 இல் சோமேசுவரர் கோயிலைக் கட்டிக் கும்பாபிஷேகஞ் செய்து நிலதானம் செய்துள்ளார். இவருடைய சிறப்புக்களில் ஒன்று ஆதுலர் சாலை ஏற்படுத்தியமையாகும். '" தொகுப்புரை இதுகாறும் கூறியவாற்ருன் நம்முன்னேர் மருத்துவ அறிவு பெருகப் பெற்றிருந்தனர் எனவும், ஆதுலர் சாலைகள் பலவிடங்களில் இருந்தன எனவும், சிறந்த மருத்துவர்கள் வைத்தியம் செய்தனர் எனவும், கோயில் களில் ஆதுலர் சாலைகள் நடத்தப் பெற்றன எனவும், வைத்திய போகங்களை வழிவழி அநுபவித்து வைத்தியர்கள் இலவசமாக வைத்தியம் செய்தனர் எனவும், சல்லி யக்கிரியை செய்வானும் (Surgeon) உண்டு எனவும், வைத்தியக் கல்லூரிகள் இருந்தன எனவும், பெருந்தனக் காரரும் ஒரோ வழி ஆதுலர்சாலைகள் ஏற்படுத்தினர் எனவும் அறியப்பெறும். - 16 175 of 1911. 17 பெருந்தொகை செ-1122.