பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


24 சேர்ந்த திருக்கொடுங்குன்றம் உடையான் கேரள ராசன் ஆன வீரமழகிய நிஷதராசன் என்பார் நில மளித்தார். இச்செய்திகள் மூன்ரும் குலோத்துங்க சோழனின் 21 ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்து உரைக்கின்றது." கும்பகோணம் தாலுகா முன்னியூரிலும் திருவகத் தீசுவர முடையார் கோயில் தெற்கில் திருமடைவிளாகத் தில் திருஞானசம்பந்தன் குகை இருந்தது. புத்துார் ஆன திருபுவனமாதேவிச் சதுர்வேதிமங்கலத்துப் பெருங் குறி மகாசபையார், இக்குகைக்குப் பூண்டியுடையான் உதையஞ் செய்தான் அளித்த நிலத்தை ஊர்க்கீழ் இறையிலியாக்கிய செய்தி மூன்ரும் இராசராசனது 22ஆம் (கி. பி. 1200) ஆட்சியாண்டுக் கல்லெழுத்து அறிவிக்கிறது. * திருநாவுக்கரசு குகை ཟས་གོ།། திருக்குறுக்கையில் உள்ள மூன்ரும் குலோத்துங்க சோழனுடைய 29ஆம் ஆட்சியாண்டு (1201க்குரிய) கல் லெழுத்து திருநாவுக்கரசு குகை என்று ஒரு குகை யைப் பற்றிக் கூறுகிறது. இக்குகை கட்டுவதற்கும், இக்குகைக்கு வரும் அபூர்விகளுக்கும் , திருவைகாசித் 311 of 1928. 609 of 1902. 219 Of 1917. அபூர்விகள் ' வேதம்வல்லவர்; பெரும்பாலும் தலயாத்திரை செய்யும் பிராமணரைக் குறிக்கும்’S. I. T. I. Pt III, P. 1393.