பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


25 திருநாளுக்கு வரும் மகேசுவரர்களுக்கும் உணவு அளிக் கவும், நெல் தானம் செய்யப்பெற்றது. திருத்தாண்டகம் ஒதுவது குறித்தும் இக்கல்லெழுத்து அறிவிக்கிறது. ஆலால சுந்தரன் குகை மிழலே நாட்டுத் தலைவர் ஆகிய புலியூருடையான் ஆதித்ததேவன் என்பவருடைய மகளும், கண்ணமங்கல முடையான் வீமப்பிள்ளை என்பவருடைய மனைவியுமாகிய ஒருவர், திருமணச் சேரித் திருக்கோயிலில் அம்மன் திருக்கோயிலைக் கட்டுவதற்கும், பூண்டி என்னும் ஊரினராய புகலி வேந்தர் என்பார் தங்குவதற்கு ஆலால சுந்தரன் குகை என்று ஒரு குகை கட்டுவதற்கு மாக நன்கொடை வசூலித்தமை குறித்து மூன்ரும் இராச ராசனின் ஆருவதின் எதிராமாண்டு (1222க்குரிய) கல்லெழுத்துக் கூறுகின்றது. திருத்தொண்டத்தொகையான் குகை மூன்ரும் இராசேந்திர சோழனுடைய 4ஆவது ஆட்சி ஆண்டு (1250க்குரிய) திருவிடைவாயில் கல்லெழுத்தி னின்று திருத் தொண்டத் தொகையான் குகை' என்று ஒரு குகை திருவிடைவாய் என்னும் தலத்தில் 7. திருத்தாண்டகம் போலத் திருவெம்பாவை, திருச் சாழல் ஆகியவை மட்டும் ஒதுவதற்கு நிபந்தங்கள் அளிக்கப்பெற்றமையைச் சாஸனங்கள் கூறுகின் றன. திருப்பனந்தாள் ரீ காசிமடத்து வெளியீடு கள் திருவெம்பாவை, திருச்சாழல் ஆங்கில மொழி பெயர்ப்பு - முன்னுரைகளைக் காண்க. இந்நூல் 'திருவெம்பாவை’ என்ற கட்டுரையும் காண்க. 8. 28 of 1914.