பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


28 ஊரவர் காணியும் இறையிலியுமாக 350 குழிநிலம் அளித் தார்கள். ' உடையார் திருவையாறுடைய சந்தானத்துக் கடவார் நிச்சயித்துக் குகையிலிருப்பார்' என்ற வாசகம் இக்குகையில் இருக்க வேண்டியவர் யார் என்பதைக் கூறுகிறது. திருப்புகலூரில் சேரமான் தோழர் என்ற ஒருதவசி இருந்தார். அரசனது ஆயுஷ்யார்த்தமாக, இத்தவசி வேண்டிக் கொண்ட வண்ணம், திருப்புகலூரில் ஒரு குகை கட்டப் பெற்றது. அதில் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்தனர் என்றும், அது திருப்புகலூருடையார் கோயிலின் வட கிழக்கு மூலையில் நிறுவப் பெற்றது என்றும் இரண்டாம் இராசராசனது 3 ஆம் ஆட்சி ஆண்டு (1219 க்குரிய) கல்லெழுத்து உரைக்கின்றது. பொலிசாத்தழகியான் குகை கோயில் திருமாளம் என்பது சோணுட்டுச் சிவஸ் தலங்களுள் ஒன்று. இவ்வூரில் பொலிசாத்தழகியான் குகை என்று ஒரு குகை இருந்தது. குகை நடத்துவதற் குரிய செலவுகளுக்காகத் திருமாகாளமுடையார் தேவ தான நிலங்கள் வாங்கப் பெற்றன். பிள்ளைகாலிங்க ராயர் என்பவர் அந்நிலங்களினின்று பெறக்கூடிய வரிகளையெல்லாம் இக்குகைக்கு அளித்தார். இச்செய் தியை மூன்ரும் இராசராசசோழனது 4 ஆம் ஆட்சி ஆண்டு (1219க்குரிய) கல்லெழுத்தில் காணலாம். . 14, 87 of 1928. 15. 241 of 1917.