பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29


29 திருத்தருப்பூண்டியில் குகை திருச்சிற்றம்பல முடையார் என்று ஒரு சைவத் துறவி திருத்தருப்பூண்டிக்கு வந்தார். அவரை அவ் வூரிலேயே தங்கியிருக்குமாறு திருத்தருப்பூண்டிப் பெரு மக்கள் வேண்டிக் கொண்டு, ஒரு குகை கட்டிக் கொடுத்ததோடு, தேசாந்திரிகளுக்கு உணவு அளிக்க நிலமும் அளித்திருந்தனர். மூன்ரும் குலோத்துங்க சோழனுடைய 22ஆம் ஆட்சியாண்டில் (1200 ல்) குகை யிடிகலகம் ஒன்று நடந்தது; இத்திருத்தருப்பூண்டிக் குகையும் அழிக்கப்பெற்றது ; எனினும் இரண்டாண்டு களுக்குப் பிறகுதான் ஷெ சைவத்துறவி இறையடி அடைந்தார் ; ஹ்ருதயதேவர் என்பார் அக்குகைக்குத் தலைவர் ஆளுர், குகையிடிகலகம் ஷெ திருத்தருப்பூண்டிக்குகை குறித்தும், குகையிடி கலகம் குறித்தும் மூன்ரும் இராசராசனது இரண்டாம் ஆட்சியாண்டு (1218க்குரிய) கல்லெழுத்துக் கூறுகிறது: மூன்ரும் குலோத்துங்க சோழனுடைய 22ஆம் ஆட்சி யாண்டில் குகையிடிகலகம் நடந்தது ; அந்நாட்களில் சைவத்துறவிகளின் மடங்களாகிய பல குகைகள் அழிக்கப்பெற்றன ; அங்ங்ணம் அழிக்கப்பெற்றவற்றுள் திருத்தருப்பூண்டிக்குகையும் ஒன்று. இக்குகையிடி கலகம் சோழ மன்னர்களுக்குக் குருமார்களாக நிலவியவர் களும், கோளகி மடம், பிட்சாவிருத்திமடம் முதலான சைவாதீனங்கட்குத் தலைவர்களாயிருந்தவர்களும் ஆகிய 16. 471 of 1912 ; ARE 1913, II, 42.