பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


31 நாட்டுச் சில நாடுகளில் சமய முதலிகள் சில வரிகளை வசூலித்துத்தர ஏற்பாடு செய்த விவரம் இச்செப்பேட்டில் கூறப்பெற்றுள்ளது. குகைகமச்சிவாயர் : இவர் பதிருைம் நூற்றண் டில் வாழ்ந்த ஒரு சைவத்துறவி : “ திருவண்ணுமலேயில் ஒரு குகையில் யோகிருந்தமையால் குகை என்னும் அடைமொழி கொடுத்து வழங்கப் பெற்ருர். இவர் தவம் புரிந்த குகையை இன்னும் அடையாளம் காட்டுவர் அந்நகர மக்கள்.’’ இவர் இயற்றிய நூல் அருணகிரியந் தாதி. இவர் மாணவர் குருநமச்சிவாயர். குகை மடம் சிதம்பரத்தில் கண்கட்டி மடம் ' என்று ஒரு மடம் தெற்கு வீதியும் கீழை வீதியும் கூடுமிடத்தில் இருந்தது எனக் கூறப்பெறுகிறது. இதில் சிவதரு மோத்தரம் முதலிய நூல்களே இயற்றியவரான ஞானசம் பந்தர் என்பார் வாழ்ந்து வந்தார். இவர் உலகத்தவரைப் பாராது தமது இருகண்களையும் துணி கொண்டு இறுகக் கட்டிக் கொண்டு இருந்தமையின், இவர் வாழ்ந்த இடத் திற்குக் கண்கட்டி மடம் ' என்று பெயர் வழங்கி வந்தது. இம்மடத்திற்குக் குகை மடம் ' என்று பெயர் இருந்த தெனத் தெரிய வருகிறது. 20. கலைக்களஞ்சியம் தொகுதி 3-பக்கம் 737. 21. திரு. S. சோமசுந்தர தேசிகர்-16ஆம் நூற் ருண்டுப் புலவர் வரலாறு, பக்கம் 72.