பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hl– திருச்சிற்றம்பலம் திருப்பதியம் விண்ணப்பித்தல்*

  • சொற்கோவும் ேதா னி புரத் தோன்றலும் சுந்தரரும் மன்பதைகள் உய்யும் வண்ணம் ஒதியருளிய திருநெறிய தமிழே திருப்பதியம் என்று கல்லெழுத்துக் களில் வழங்கப்பெறும். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தரும் நாவினுக்கரையரும் ஒதிய நற்றமிழ் மாலைகளை அவர் சொல்லியாங்குச் சொல்லி ஏத்தின் சிவபெருமான் உவந்தருளுவார் என்று சுந்தரர் பகர்ந்துள்ளார். நன்பாட்டுப் புலவனுய்ச் சங்கமேறிய சிவபெருமான் இன்னிசைத் தீந்தமிழ்ப் பனுவல்களைப் பண்ணுென்றப் பாடின் பலவாற்ருனும் பரிந்தருளுகிருர். இருந்து தமிழோடிசை கேட்கும் இச்சையால் நித்தல் அப்பருக்கும் சம்பந்தருக்கும் சிவபெருமான் திருவிழி மிழலேயில் காசு நல்கியது இத்தமிழ்நாடு அறிந்ததே. இவற்றை நன்குணர்ந்து வழி வழிச் சிவம்பெருக்கிய சோழ மன்னர்கள் வானளாவிய சிவனுறை கோயில்களைக் கற்றளிகளாக அமைத்தும், இறைவன் திருமுன் பண் சுமந்த பாடலே விண்ணப்பிக்கச் செய்தும் விண்சுமந்த வியன் கீர்த்தி எய்தினர். இங்ங்னம் திருநெறிய தமிழைத் திருக்கோயில்களில் ஒதச் சோழமன்னர்களும் பிறரும் அளித்த நிபந்தங்கள் பல. அவற்றுள் கண்ட சில சிறப்புடைச் செய்திகளைச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திருக்கோயிலில் வெளி வந்தது. 3