பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


34 மிகப் பழைய நிபந்தம் திருப்பதியம் விண்ணப்பம் செய்யக் கொடுக்கப் பெற்ற நிபந்தங்களுள் மிகப் பழமையானதாகக் கருதப் படுவது, மூன்ரும் நந்தி வர்மன் என்ற பல்லவ அரசன் காலத்த தாகும். இவன் 825 முதல் 850 வரை ஆட்சி செய்தவன். சிவனே முழுதும் மறவாத சிந்தையன்' என்று நந்திக்கலம்பகம் இவனைப் போற்றுகின்றது; :சிவனது திரு அடையாளம் (திருநீறு) நெற்றியிற் கொண்ட நந்திவர்மன்’ என்று வேலூர்ப் பாளேயப் பட்டயங்கள் பகர்கின்றன. இத்தகைய பல்லவ அரசன், தன் 17ஆவது ஆட்சியாண்டில், திருவல்லம் கோயிலுக்கு மூன்றுார்களே விடேல் விடுகு விக்கிரமாதித்தச் சதுர்வேதி மங்கலம் என்று பெயரிட்டுத் தேவதானமாக விட்டான் S. . . V31111 பக்கம் 93). அவ்வூரினின்று ஆண்டு தோறும் 2000 காடி நெல்லும் 20 கழஞ்சு பொன்னும் வருமானம் வரும்; இவ்வருமானத்தில் திருப்பள்ளித் தாமம் பறிப்பார்க்கும் திருப்பதியம் பாடுவார் உள்ளிட்ட பலபணி செய்வார்க்கும் நானுாற்றுக் காடி நெல் ஒதுக்கப் பெற்றது. (3 காடி-ஒரு கலம்.) எனவே சுந்தரர் காலத்தை யொட்டியே திருக்கோயில்களில் தேவாரம் ஒதுவதற்கு வழிவகை செய்தார்கள் என்று இதனுல் அறியலாம். அந்தணர் ஒதுதல் திருத்தவத்துறை என்ற பாடல் பெற்ற தலம் இந் நாளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் லால்குடி என்ற பெயரில் திகழ்கிறது. திருத்தவத்துறை மகாதேவர் திருமுன் நாடோறும் மூன்று சந்திகளிலும் இரண்டு பிராமணர் திருப்பதியம் விண்ணப்பம் செய்யச்