பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


35 சிவகோசரிபிடாரன் தேசவிடங்கன் என்பார் நிலதானம் செய்தார் என்று முதற் பராந்தக சோழனுடைய 37 ஆம் ஆட்சியாண்டு (கி. பி. 943) க்குரிய கல்லெழுத்து நவில்கின்றது (99 of 1929). இந்நிவந்தம் போதாமை கண்டு 16 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரசோழனுடைய மூன்ருவது ஆட்சி யாண்டில் (கி. பி. 959 இல்) மேற் குறித்த சிவகோசரிபிடாரன் சிறிது நிலம் அளித்தான் என்றும், நிலத்தினின்று பெறும் எள்ளுக்கு உரிய எண்ணெயில் குடிவாரப் பகுதி கோயிலுக்குச் சேர வேண்டும்; நிலத்துக்குரிய .ெ ச வ் வார ப் பகுதி திருப்பதியம் விண்ணப்பம் செய்வார் பெற வேண்டும் என்று ஏற்பாடு செய்தான் என்றும் இன் ைெரு கல்லெழுத்துக் கூறுகின்றது (104 of 1929). இவற்ருல் அந்தணர் கோயிலில் திருப்பதியம் விண் ணப்பம் செய்து வந்தனர் என்பது தெள்ளிது. இத் தருமத்தைச் செய்தவர் பெயருள் கண்ட சிவகோசரி: என்பது திருக்காளத்தியில் குடுமித் தேவன்ரப் பூசித்து வந்த சிவகோசரியாரை நினைப்பிக்கும். இதனுன் இச்சிவகோசரியாரும் முப்போதும் திருமேனி தீண்டும் சிவப்பிராமணர் ஆதல் கூடும்; பிடாரன் என்றமையின் இவரும் தேவாரம் ஒதுதலில் வல்லவர் ஆதல் கூடும் என்றும் ஊகித்தறியலாம். சிவபூசகர் விண்ணப்பித்தல் தஞ்சை இராசராசேச்சரத்தில் முதலாம் இராசராச னது 29 ஆம் ஆட்சியாண்டில் (அதாவது கி. பி. 1014 இல்) 'உடையார் நீராஜராஜீச்சுவரமுடையார்க்குத் திருப்பதியம் விண்ணப்பம் செய்ய உடையார் ரீ ராஜராஜதேவர் குடுத்த பிடாரர்கள் நாற்பத்தெண்மர் :