பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


38 பாடிவந்தனர் என்று கோப்பரகேசரிபன்மரது 4 ஆம் ஆட்சி ஆண்டுக் கல்லெழுத்து(687 of S. 1. 1. Vol. VIII; No 373 A of 1903) குறிப்பிடுகின்றது. திருவிளாங்குடியில் இடிந்து கிடக்கும் சிவன் கோயிலிற் கண்ட முதலாம் இராசராச சோழனது 28ஆம் ஆட்சி யாண்டுச் சாஸனம் (புதுக்கோட்டைச் சாஸனங் கள், எண் 90) சில அரிய செய்திகளைக் கூறுகிறது. நூற்று வேலி என்று பேர் கூவப்படும் குடிக்காடு, குளம் உடைகுளமாய்க் காடெழுந்து கிடந்தது; காட்டை வெட்டிக் குளம் கல்லி முன் பெயர் தவிர்த்துச் சேனுபதி உத்தம சோழ நல்லூருடையான் பாளுர் அம்பலத்தாடி யான முடிகொண்ட சோழ விழுப்பரையர் தாயார் பாகுர் நங்கையார் பேரால் பாசூர் நங்கை நல்லூர் என்று புதுப் பெயர் கொடுத்தனர், அவ்வூர்ப் பெருங்குறி மகாசபையார். இந்நிலத்தின் வருவாய், சித்திரைத் திருநாள் திருவாதிரைத் திருநாள் ஏழு நாட்களுக்கு வேண்டும் அழிவுகளுக்குப் பயன்படுத்துவதோடு, இத்தேவர்க்கு முன் திருப்பதியம் விண்ணப்பம் செய்யும் அடிகள்மார்க்கு நிவந்தம் இல்லாமையால் திருப்பதியம் விண்ணப்பம் செய்வார் நான்கு பேருக்கு ஊதியம் அளிக்கவும் இடம் தரப் பெற்றது. தேவரடியார் நடித்துப் பாடுதல் 1063 முதல் 1070 வரை ஆட்சி செய்த வீர ராஜேந்திர சோழனது திருவொற்றியூர்க் கல்வெட் டொன்று, மணலி என்னும் ஊரிலிருந்த 60 வேலிநிலத்தை வீரராசேந்திர விளாகம் என்று பெயரிட்டு அரசனின் ஆயுஷ்யார்த்தமாகவும், அரசியாரது மாங்கல்யத்தைக்