பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41


41 என்றுள்ளது. சிவன்கோயிலில் ஒதப் பெறும் பெரிய திருப் பாட்டு என்பது தேவாரத்திருமுறைகளைத் தவிர்த்து வேறு யாதாயிருத்தல் தகும் ? திருஞானம் ஓதுதல் திருநெல்வேலி மாவட்டம் திருவாலீசுவரம் என்ற தலத்திலுள்ள சிவாலயத் திருமதில்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியனது 3 ஆம் ஆட்சி யாண்டில் அமைந்த சாஸனம் ஒன்றில் (359 of 1916), * திருஞானம் விண்ணப்பம் செய்வதற்குச் சிவப் பிராமணர் எண்மர் கோளகி மடத்து ஞானுமிர்தாசாரிய சந்தானத்தைச் சார்ந்த புகலிப்பெருமாள் என்பாருடன் உடன்படிக்கையின் பேரில் நிலம் விற்றனர்' என்று வரை யப் பெற்றுள்ளது. இதனுல் சிவப்பிராமணர் திருஞானம் விண்ணப்பித்தனர் என்று அறியலாம். திருந்ெல்வேலித் திருக்கோயிலில் திரு ஞானம் ஒத விக்கிரம சோழ தேவர் கண்ட தவசிகளில் பதினுெரு பேர்க்கும், இவர்கள் வர்க்கத்தில் திருஞானம் ஒதும் பேர்க்கும், பதிளுெரு மனைகள் யாண்டு 15ஆவது முதல் மடம் எடுத்திருக்கக் காணியாகத் தரப்பெற்றன என்று gods associal G (420 of S. I. I. Vol. V ; 131 of 1894) விவரிக்கின்றது. இனி, போஜனம் உள்ளிட்டு வேண்டு வன வற்றுக்கு நிலம் ஒரு வேலியும் எட்டுமா கோமாற பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டிய தேவரது ஆட்சி யாண்டு பதினைந்தாவது முதல் திருஞானப்புற இறையிலியாகத் தரப்பெற்றது என்று இன்னெரு சிலமேல் எழுத்து (421 of S. 1. 1. Vol. Y 132 of 1894) செப்புகின்றது.