பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42


42 திருச்செந்துர்த் தாலூகா ஆற்றுார்க் கல்வெட்டில் (463 of 1929-30) திருஞானம் ஓதுவதற்குத் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலத்தில் நிபந்தம் கொடுக்கப் பெற்றது என்று படிக்கிருேம். இக் கல்வெட்டுக்குரிய அரசன் 1239 இல் பட்டம் பெற்ற மாறவர்மன் சுந்தரபாண்டியன் II என்றும், விக்கிரம சோழதேவர் என்பார் கொங்குச்சோழர் என்றும், இச் சுந்தரபாண்டியர்க்கு மச்சுனனுர் என்றும் ஆராய்ச்சி ursri on-psus (Page 77 of A. R. E. for 1929-30). திருஞானம் என்பது தேவாரம் போலச் சமயகுர வருள் ஒருவரால் அருளப்பெற்ற பக்திநூலாக இருத்தல் கூடும் என்று ஆராய்ச்சியாளர் கருதுவர் (Page 77 of A. R. E. for 1929-30). எனினும் சம்பந்தராதிய மூவர் பாடிய தேவாரத்தையே திருஞானம் என்பது குறிக்கும் எனக்கொள்ளுதல் தகும். சீகாழிப் பதியில் இறைவியா ரளித்த பாலடிசில் உண்டு, சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனே அறமாற்றும் பாங்கினிலோங் கியஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்” என்று சேக்கிழார் பகர்வர். இதல்ை ஞான சம்பந்தர் தேவாரத்தையே திருஞானம் என்று குறித்தனரோ என்று ஐயம் எழும். தலைஞாயர் என்ற ஊரிலுள்ள மூன்ரும் இராசேந்திரனுடைய 3 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட் டும் (149 of 1927), இவ்வரசனது 23ஆம் ஆட்சியாண் டுக்குரிய (கோவிலூர்) திருவுசாத்தானக் கல்வெட்டும்