பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43


43 (216 of 1908) சம்பந்தரைத் திருஞானம் பெற்ற பிள்ளையார் என்று குறிப்பிடுகின்றமையின் இவ்வையம் பின்னும் மிகுகின்றது. ஆளுல் சம்பந்தர் முதலிய மூவர் அருளிய தேவாரத்தைக் காழித் தாண்டவராயர் என் பார் தாம் எழுதிய திருவாசக வியாக்யானத்தில், * திருமெய்ஞ்ஞானத் திருநெறித் தேவாரம்' என்றும், " திருமெய்ஞ்ஞானத் திருநெறித் தமிழாகிய தேவாரம்" என்றும் கூறியுள்ளமையால், திருஞானம் என்பது மூவர் தேவாரத்தையே குறித்ததாகக் கொள்ளலாம். கூகூர்க் கல்வெட்டு தஞ்சாவூர் ஜில்லாவில் கூகூரில் காணப்படும் கல் வெட்டுடொன்று (S. T. 1. Vol. III No. 57), அதி ராசேந்திரன் தன் 3 ஆம் ஆட்சி யாண்டில் கொடிய நோயால் துன்புற்றனன் என்றும், இவ்வரசன் உடல் நலனுறுதல் வேண்டும் என்று அவ்வூர்க்கோயில் இறை வன் திருமுன் தேவாரப்பதிகங்களை நர்டோறும் இரு முறை ஓதினர் என்றும் குறிப்பிடுகின்றது. இதனுல் நோய்வாய்ப்பட்டார் உடல் நலன் எய்துதற் பொருட்டுத் திருப்பதியம் விண்ணப்பிக்கச் செய்யும் பழக்கம் பண்டு நிலவி யிருந்தது என்று அறியலாம். திருக்கை கொட்டி இச்சொற்ருெடரைத் திருக்கைக்கோட்டி என்றும் படிக்கலாம். திருக்கரவாசலில் ஒரு கல்வெட்டு மூன்ரு ம் இராச ராச சோழனின் 28 ஆம் ஆட்சியாண்டுக்குரியது. (454 of 1908). அவ்வூரில் வாழ்ந்த சிவனடியார்களில் ஒருவராகிய நமச்சிவாயத் திருமேனி என்பவரால் திருக் கைக்கோட்டியில் திருமுறை ஒதுவார்க்கு உணவளிக்க