பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


44 நிபந்தம் கொடுக்கப்பெற்றது-என்று அதில் உள்ளது (பக்கம் 100, A. R. E. for 1909). இவ்வரசனது 22 ஆம் ஆண்டுக்குரிய திருக் கோவிலூர் (உசாத்தானக்) கல் வெட்டு அவ்வூர்க்கோயிலில் திருக்கைகொட்டி இல்லத்து இருந்த ஒதுவார்க்கு சொக்களுயனை இராசகம்பீரச் சோழியவரையனுல் இறையிலிநிலம் அளித்த செய்தி யைக் கூறுகிறது. திருக்கைகொட்டி இல்லம் என்பது திருமுறை ஒதும் மண்டபம் ஆகும் , அவ்வில்லத்தைக் கண்காணிப்பவர், திருக்கை கொட்டி இல்லத்துறையார் : இதற்கு அளிக்கப்படும் நிபந்தம் திருக்கை கொட்டிப்புறம் எனப்படும். ஒதுவார்களை நிச்சயித்து ஒதுவாராகப் பண்ணுவதே இத்துறையாரது கடமை என்று இக் கல்லெழுத்தில் கூறியுள்ளது ; அங்ங்னமாயின் தேவா ரத்தை இசையோடு கற்பிப்பது இவ்வில்லத்திருந்த ஒதுவார் கடமையாகலாம். திருக்கை கொட்டி என்பது கையைக் கொட்டிப்பாடியருளிய சம்பந்தரைக் குறிக்கும் என்பாருமுளர் ; அங்ங்னமாயின் சம்பந்தர் திருப்யெய ரால் அமைந்த தேவாரம் ஒதும் மண்டபம் என்பது பொருளாகக்கொள்ள வேண்டும். இச்சொற்ருெடரைத் திருக்கைக் கோட்டி என்று படித்தால், கையைக் கொட் டிப் பாடும் ஒதுவார்கள் பலர் கூடிய கோஷ்டி என்று பொருள் படும். இந்நாளிலும் தேவார கோஷ்டி என்று கூறுதலும் இதனே வலியுறுத்தும். திருவீழிமிழலையில் திருமுறை ஒதுவதற்காக நரசிங்க தேவன்' என்பவர்காலத்தில் திருக்கைக் கோட்டி மண்ட பம் கட்டப்பெற்றது. இங்குத் திருமுறை ஒதுபவர்க்கு நிலநிபந்தம் சடாவர்மன் சுந்தரபாண்டியனின் 9 ஆம் ஆண்டில் கொடுக்கப் பெற்றது (414 of 1908).