பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


45 சீகாழியில் திருஞானசம்பந்தர் கோயிலில் உள்ள குலோத்துங்க சோழனின் கல்வெட்டொன்றில் “ இக் கோயில் திருக்கைக் கோட்டியில் எழுந்தருளியிருக்கிற திருமுறைகள் திருக்காப்பு நீக்கி . . . . திருமுறை பூசித்தும் இருக்கைக்கு . . . . இறையிலியாக இட்டநிலம் ' என்று கூறியுள்ள பகுதியால் திருமுறை கள் வைத்துப் பூசிக்கப்பெற்ற கோயில் மண்டபம் திருக்கைக் கோட்டி என வழங்கப்பெற்று வந்தது என்றும் தெரியவருகிறது (திரு. சதாசிவ பண்டாரத்தார்-திருக்கைக் கோட்டி என்ற கட்டுரையில் விரிவுகாண்க). முடிப்புரை இதுகாறும் கூறியவாற்ருன் அந்தணரும், சிவ பூசகரும், பெண்டிரும், குருடரும் திருப்பதிகங்களைக் கற்றுப்பாடும் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்றும், பலர் தீகூைடி, பெற்றவராகவும் இருந்தனரென்றும், பெண்டிர் சத்துவம் தோன்ற நடித்துப் பாடினர் என்றும், திருப்பாட்டு, பெரிய திருப்பாட்டு, திருஞானம் என்ற பெயர்களான் குறிக்கப்பெற்றவை மூவர்பாடிய தேவா ரங்களேயாதல் தகும் என்றும், திருக்கைக் கோட்டி என்பது யாது என்றும் அறியப்பெறும்.