பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாயிரப் பிரபந்தம் * முன்னுரை ஆழ்வார்கள் பன்னிருவர் அருளிய பிரபந்தங்களே அறியாதார் இரார்; இவற்றை நீ வைஷ்ணவர்கள் நாடோறும் விண்ணகரங்களிற் பத்திமையோடு ஒதுதல் இந்நாளில் எங்கும் கேட்கப்பெறுகின்றது. இந்நாள் போல் முன்னுளிலும் திருமால் கோயில்களில் பிரபந்தம் ஒதுவதற்கு அரசர்கள் நிபந்தம் அளித்திருந்தனர். மக்களும் அரசியல் அலுவலரும் வைணவத்தில் பற்றுடை யராய் வாழ்ந்து வந்தமையும் கல்லெழுத்துக்கள் பகர் கின்றன. இவற்றுள் சில சிறந்த செய்திகளைக் குறிப்பிடு வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். க திருநெடுங்தாண்டகம் இது திருமங்கையாழ்வார் அருளியதாகும். திருமங் கையாழ்வார் திருவாலி நகரத்தில் தோன்றியவர்; திரு நறையூர் நம்பியிடம் திருவிலச்சினை பெற்றுத் திருமாலடி மைத்திறம் பூண்டவர். இவர் நாலுகவிப் பெருமாள். எனப்பெற்ருர். இவர் இயற்றியருளியவை சிறிய திருமடல், பெரிய திருமடல், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந் தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, பெரியதிருமொழி என்பன உபதேச ரத்னமாலை என்ற நூலுள், மாறன் பணித்த தமிழ்மறைக்கு மங்கையர் கோன் ஆறங்கம் --- --

திருக் கோயிலில் வெளிவந்தது. 1. ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம்.