பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


50 டருளினர். அப்பொழுது ஒரு உத்தரவு பிறப்பிக்கப் பெற்றது. இதன்ை திருமால் திருமுன் நம்மாழ்வார் அருளிய பிரபந்தங்கள் விண்ணப்பிக்கப் பெற்றன என்பது அறியக்கிடக்கின்றது. இனிக் குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 15 ஆவது, திருவரங்கத்து நம்பியும், இவன் மகன் மன்னன் திருவரங்க நம்பியும், மன்னன் பெண்ணைக் கூத்தனை திருக்கண்ண புரத்தரையரும், மன்னன் திரு விண்ணகர் நம்பியும், மன்னன் திருநாட்டு நம்பியும், திருவரங்கத்தில், திருவரங்கத்தாழ்வார் கோயிலில், திருப்பள்ளியெழுச்சி, திருவாய்மொழி விண்ணப்பம் செய்யக் கைத்தீட்டுக் கொடுத்தனர். இங்ங்ணம் ஒரு கல்வெட்டில் (61 of 1892 ; S. 1. 1. IV 508) காணப் பெறுகிறது. திருப்பள்ளியெழுச்சி மேற்குறித்த திருவரங்கக் கல்லெழுத்தில் திருப்பள்ளி யெழுச்சி விண்ணப்பித்தல் குறிப்பிடப்பெற்றது. திருப் பள்ளியெழுச்சியை அருளியவர் தொண்டரடிப் பொடி யாழ்வார் ஆவர். இவர் திருமண்டங்குடி என்னும் ஊரினர்; திருவரங்கம் பெரிய கோயிலில் திருமாலைத் திருப்பணி செய்துவந்தவர். இவர் அருளிய திருப்பள்ளி யெழுச்சியை விண்ணப்பித்தலேக் கல்வெட்டுக் குறிப்பிடா நிற்கத் திருவிடைமருதூர்க் கல்லெழுத்தொன்று தொண்ட ரடிப் பொடி என்ற பெயருடைய ஒரு அன்பரைக் குறிப் பிடுகின்றது. இதன்ை 10 ஆம் நூற்றண்டிலேயே இவர் திருப்பெயரை மக்கட்கிடும் பழக்கம் வந்துவிட்டது என்பது தெளிவு.