பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51


51 தேட்டருந்திறல் இது குலசேகராழ்வார் அருளிய திரு மொழியில் இரண்டாம் பத்து. இக் குலசேகராழ்வார் திருவஞ்சைக் களத்தில் பிறந்தவர்; இராமாயணத்தில் மிகுந்த ஈடு பாடுடையவர். இவர் பாடியது பெருமாள் திருமொழி எனப்பெறும். இதனுள் ஒரு பகுதியாகிய தேட்டருந் திறல் ரீரங்கத்தில் விண்ணப்பித்தலைப் பற்றிக் குலோத் துங்கசோழனது, ரீரங்கத்தில் உள்ள 18 ஆம் ஆட்சி யாண்டுக் கல்லெழுத்துக் கூறுகிறது (62 of 1892; S. T. 1. III 70): " ஐப்பசித் தேர்த்திருநாளிலும் பங்குனித் திருநாளிலும் தீர்த்தம் பிரசாதித்தருளின அன்று இரா, திருப்புன்னேக்கீழ் எழுந்தருளியிருந்து தேட்டருந்திறல் கேட்டருளும்போது” என்பது சிலமேல் எழுத்து. எனவே மேற்குறித்த இரண்டு நாட்களும் புன்ஆனயின் கீழ்த் திருமாலே எழுந்தருளச் செய்து குலசேகராழ்வார் பாசுரங்களே விண்ணப்பிக்கச் செய்தனர் என்பது அறியப் படுகின்றது. (இக்கல்லெழுத்தில் சட்கோபதாசன், குருகை காவலன் என்ற பெயர் பூண்ட அரசியல் அலுவலர் குறிப்பிடப் பெறுகின்றனர்.) திருமொழி திருமங்கை மன்னன் அருளியது பெரிய திருமொழி; மேற்குறித்த குலசேகராழ்வார் அருளியது பெருமாள் திருமொழி; பெரியாழ்வார் பாடியது பெரியாழ்வார் திரு மொழி ஆண்டாள் பாடியது நாச்சியார் திருமொழி. பெரியாழ்வார் ரீவில்லிபுத்தூரில் பிறந்தவர் ; இவர், திருமொழியோடு திருப்பல்லாண்டும் பாடியுள்ளார். இவரது மகளே சூடிக் கொடுத்த நாச்சியார் அல்லது ஆண்டாள். இவ்வாண்டாள், நாச்சியார் திருமொழி யோடு திருப்பாவையும் பாடியுள்ளார். இவர்கள் அரு