பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52


52 ளிய திருமொழி விண்ணப்பித்தலேக் குறித்து முதல் இராசராசனது 26 ஆம் ஆட்சி ஆண்டுக்குரிய காஞ்சி புரத்துக் கல்வெட்டினின்று தெரியவருகின்றது (557 of 1919). உக்கல் என்ற ஊரின் ஒருபகுதி பெரியணஞ் சேரி. இவ்வூர் மகாசபையாரிடம் இருந்து பெருமாள் தாசர் என்பார் 17% வேலிநிலத்தை வாங்கியளித்து, அத் நில வருவாயிலிருந்து 58 அந்தணர்கள் திருமொழி விண்ணப்பிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தார். பிரணயபத்திரிகை இது ரீவில்லிபுத்துரில் சூடிக்கொடுத்த காச்சியார் கோயிலில் உள்ள சாஸனம். பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்கோன் விஷ்ணு சித்தன் கோதைக்கு நாம்வரக் காட்டின பிரணயபத்தி ரிகை என்று ரீரங்கநாதரே ஆண்டாளுக்கு எழுதிய கடிதம்போல் உள்ளது இச்சாஸனம். திருவரங்கத்தில் பெரியகோயிலில் சேரனே வென்ருன் மண்டபத்தில் சுந்தரபாண்டியன் பந்தற்கீழ் அரியராயன் கட்டிலில் பூநீரங்கநாதர் வீற்றிருந்தருளினர். அவ்வமயம் கோதை வீட்டிலிருந்து அர்ச்சகர் குடவர் தண்டெடுப்பார் முதலிய வர்கள் வந்தார்கள். பூநீரங்கநாதர் அவர்களை எதிர் கொண்டழைப்பித்தார். கோதை வரக்காட்டின சாஸ் னம் (அனுப்பிவித்த கடிதத்தை) வாசித்துக் காட்டச் செய்திகளே ரீரங்கநாதர் அறிந்து கொண்டருளினர். " ரீரங்கநாதர் பதிருைமாயிரம் தேவிமாரோடும் பெரிய மண்டபத்திலே விநோதித் திருப்பதாகத் தோழியர் கோதைக்குக் கூறினர். கோதை புண்ணிற் புளிபெய் தாற்போலவும், வேலால் துன்னம் பெய்தாற் போலேயும் மனம் வெந்து நில தளர்ந்தாள் ;