பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


53 ' கொள்ளும் பயனென் றில்லாத கொங்கை தன்னக் கிழங்கோடு மள்ளிப் பறித்திட் டவன்மார்பி லெறிந்தென் அழலைத் தீர்வேனே : என்று உள்ளே உருகி நைந்தாள் ; அரங்கநாத ரைப் பொருத்தமிலி, பெண்ணின் வருத்தம் அறியாத பெருமாள் என்று தாய் கூறி வருந்தினுள்' என்று கோதை வரக்காட்டிய கடிதத்தில் இருந்தது. இங்ங் னம் தாய் கூறியது நம்திறத்து ஊடல்கண்டு உவப்பதற் காகவே யாகும் என்று அரங்கநாதர் கருதி, நாம் முப்பத்துமூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்ப்பது காரணமாகவும் தேவரகசியமாகவும் பெரிய மண்டபத்தில் இருந்தோம்; நாம் கோதையல்லது பிறரை விரும்புவ தில்லே நமக்கு உள்ளவாறு பல்லக்கும் குடையும், நாம் பூனும் கண்டமாலே ஆபரணங்களும், பட்டுபருத்தி சுகந்த திரவியங்களும் கோதையும் பெறவேண்டும் ' என்று அருளி அடுக்களைப் புறமாகத் திடியன் ஆன திருவரங்க நல்லூரை நீரங்கநாதரே அளிப்பதாக அமைந்தது இச் சாஸனம். ரீரங்கநாதரது உத்தரவாக இச்சாஸனத் தொடர்கள் அமைந்திருப்பினும், உண்மையில் உறங்கா வில்லிதாஸன் ஆன மஹாபலி வாணுதராயர் என்னும் (அரசியல் அலுவலாளராகிய) பரமபாகவதர் ஒருவரால் இத்தருமம் அளிக்கப்பெற்றது என்பது அறிதல் தகும் (577 of 1926 ; தென்னிந்திய கோயிற் ச்ாஸனங்கள், பாகம் 1, பக்கம் 149-151). இச் சாஸனத்தின் பெரும்பகுதி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றினின்று எடுத்த பல பாடற்பகுதிகளால் ஆக்கப்பெற்றுள்ளது.