பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


56 என்றும், அவர்களுடைய நட்சத்திரம் திருக்கேட்டை என்றும், மாதந்தோறும் திருக்கேட்டை நாளில் அரு ளாளப் பெருமாள் புறப்பட்டருளி ஏகாசீதித் திருமஞ்சன மும் (81 திருமுழுக்கு), பெருந்திருவமுதும் செய்தருள வேண்டும் என்றும், இதற்கு 780 கலம் நிலம் நெல் முதற் பொருளாகத் தரப்பெற்றது என்றும் அச்சாஸ்னத்துள் சொல்லியுள்ளது. இவ்விரு ஆழ்வார்களுடைய திரு நட்சத்திரம் திருக்கேட்டை என்றது அக்காலத்தவர் கருத்தை யொட்டியே யாதல்கூடும். ஆல்ை பொய்கை யாழ்வார் திருநட்சத்திரம் திருவோணம் என்றும், பூதத்தாழ்வார் திருநட்சத்திரம் அவிட்டம் என்றும் குரு பரம்பரைகளில் கூறப்பெற்றுள்ளன. இனித் திருமழிசையாழ்வார் திருநட்சத்திர நாளில் யூரீபெரும்பூதுாரில் திருவிழா நடத்தவேண்டும் என்று வெங்கடபதிராயருடைய தேவியார் கிருஷ்ணுஜியம்மன் என்பார் பத்து வராஹன் அளித்ததாகச் சகம் 1513 (கி. பி. 1592) க்குரிய கல்வெட்டில் (195 of 1922 ; தென்னிந்திய கோயிற் சாஸனங்கள், பாகம் I எண் 544) காணப்பெறு கின்றது. இதனுல் ஆழ்வார்களுடைய திருநட்சத்திரங் களில் திருவிழாக்கள் நடத்தப்பெற்றமையும் அறியலாம். முடிப்புரை -- இதுகாறும் கூறியவாற்ருன் பிரபந்தங்கள் திருமால் கோயில்களில் ஒதப்பெற்றன என்றும், ஆழ்வார்களின் திருப்பெயர்களை மக்கள் தம் பெயராகப் பூண்டு மகிழ்ந் Tಗೆ என்றும், ஆழ்வார்களின் நட்சத்திரங்களில் திரு விழாக்கள் நடத்தினர் என்றும் பிறவும் அறிந்து மகிழ் வோமாக. -- - | o