பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60


60 லுண்டானவர்களைச் சாம்பிராச்சியம் உடையவர்களாகவும் எண்ணியருள்கின்றனன். (நேரில் கூறல்) உருத்திர பரமேசுவர! எமது மக்களைப் பிணியிலாதவர்களாய்ச் செய்வதுடன் எமது வீட்டிற்கும் வந்தருள்வாயாக! (பக்கம் 21). சாமவேதருத்ரீயம் உருத்திரபரமேசுவரன், சாமகானப்பிரியன்’ ஆகலின் சாமவேத உருத்திரத்தை ஓதினுல் பரமேசுவரனது பேரன்பினே எளிதிற் பெறலாம். சாமவேத உருத்திரத் தில் 11 மந்திரங்கள் உள்ளன. சில ஆர்ச்சிகங்கள் எனப்பெறும்; அதாவது இருக்கு மந்திரத்துக்குள்ள எழுத்துக்களைக் கொண்டே முடிந்து நிற்பது. தோத்திரத் தால் ஆனது ஸ்தெளபிகம் எனப்பெறும். இப்பதினுெரு மந்திரங்களும் உருத்திர சங்கிதை எனப் பெயர்பெறும். சாமவேத பிராமணம் என்னும் சுருதியிலும் ஆவோ ராஜா” என்றல் தொடக்கத்து உருத்திர சங்கிதையை நன்கு ஓதி உருத்திரனுக்கு அன்பு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. " ஆவோ ராஜா ’’ என்பது சாமவேதத்தில் உருத்திர சங்கிதையில் முதன் மந்திரம் ஆகும். இறப்பதன் முன்னரே பரமேசுவரனை வழிபட வேண்டும் என்று ஒரு ரிஷி தன் புதல்வர்களுக்கு அறிவுறுத்தும் முறையாக இம்முதன் மந்திரம் அமைந்துள்ளது. அதர்வண ருத்திர மந்திரங்கள் "த்ரயீ’ என்ற சொல் ரிக் யஜுர் சாம வேதங்களையே குறிப்பதால் அதர்வண வேதத்தை வேதமாகக் கருதா திருந்தனர் எனலாம். ஆல்ை யாகங்களை வெளியிலிருந்து