பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65


65 (4-5-4-11) தேரைச் செலுத்துகின்றவரும், தேரை நிறுத்திக் கொள்ளுகின்றவரும் ஆன உருத்திரர்களுக்கு வணக்கம். (4-5-4-12) தச்சர்களான, தேர் செய்கின்றவர் களான உருத்திரர்களே உங்களுக்கு வணக்கம். (4-5-5-5) ஆயிரங் கண்களையும் நூற்றுக்கணக் கான விற்களையுமுடைய உருத்திரனுக்கு வணக்கம். (4-5-5-6) கைலையங்கிரிவாசனும், திருமாலின் திரு மேனி கொண்டவனுமாகிய உருத்திரனுக்கு வணக்கம். (4-5-5-7) மேகமாய் மழை பெய்விக்கின்றவனும், பாணத்தைத் தாங்குகின்றவனுமாகிய உருத்திரனுக்கு வணக்கம். (4-5-5-11) உலகம் தோற்று முன் உள்ளவனும், அவையின் கண் தலைவனுமாகிய உருத்திரனுக்கு வணக்கம். (4-5-6-7) தான்ய விசேடமாயும் நெற்குவியல் வடிவாயுமிருக்கின்ற உருத்திரனுக்கு வணக்கம். (4-5-8-1) உமையுடன் கூடிய உருத்திரனுக்கும், துன்ப காரணத்தை நீக்குகின்ற உருத்திரனுக்கும் வணக்கம். (4-5-8-3) இன்பளிக்கும் உருத்திரனுக்கும், பசுக் களைப் பாதுகாக்கும் உருத்திரனுக்கும் வணக்கம். 5